India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் நாடாளுமன்ற தேர்தல் 5 சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் -129100, தேமுதிக -83058, பாமக -50820, நாதக -15435 வாக்குகள் பதிவாகியுள்ளது. 46042 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலையில் உள்ளார்.
ஸ்ரீபெரும்பத்தூர் மக்களவை தொகுதியில் 5ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. DMK -133554 , ADMK. – 49876, TMC – 34750, NTK – 26453 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி 2 ஆவது சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, திமுக கூட்டணி வை. செல்வராஜ் 52531 வாக்குகளும், அதிமுக கூட்டணி சுர்ஜித் சங்கர் 29262 வாக்குகளும், பாஜக ரமேஷ் 9276 வாக்குகளும், நாதக கார்த்திகா 13623 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
திருவள்ளூர் தொகுதியில் 4வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 1,15,870 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 37,303 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பாலகணபதி 35,095 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்படி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியைவிட, காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 78,567 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 4வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் அருண் நேரு 1,18,062 வாக்குகள் பெற்று 79,742 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 38,320 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் 32,030 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக வேட்பாளர் தேன்மொழி 22,294 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் முன்னனி நிலவரம்:
திமுக வேட்பாளர் 57937
அதிமுக வேட்பாளர் 39032
பாஜக வேட்பாளர் 19535
நாத வேட்பாளர் 10139
திமுக வேட்பாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்து வருகிறார்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி 7 வது சுற்றின் முடிவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி, 68438 வாக்குகள் பெற்றுள்ளது. 2ஆவது இடத்தில் ஓ.பன்னீர்செல்வம்- 37731 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள்-14344 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் 11955 வாக்குகள் பெற்று உள்ளனர். இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் 4ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 43,484 வாக்குகளுடன் 10,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 33,078 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 13,255 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 3,371 வாக்குகள் பெற்றுள்ளார்.
வட சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கையின் 3 ஆவது சுற்று முடிவில் 68,191 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 20,510 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 19,728 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் அமுதினி 10,609 வாக்குகள் பெற்று 4 ஆவது இடத்தில் உள்ளார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 23,554 வாக்குகள், அதிமுக 12,082 வாக்குகள், பாரதிய ஜனதா 12,677 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 4,862 வாக்குகள் பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.