India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 8 வது சுற்று நிலவரப்படி, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 161781 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் 149933 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 115285 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாதக-24446,NOTA-3261
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமரா 73,239 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 58,805 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ராமசந்திரன் 30,978 வாக்குகளும், நா.த.க வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 10,308 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவில் 1481 வாக்குகளும் பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காலை முதல் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 5, 6வது சுற்றில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் உள்ளார். 5வது சுற்றில் நவாஸ்கனி 2698, ஓபிஎஸ் 2882, 6வது சுற்றில் நவாஸ்கனி 3214, ஓபிஎஸ் 3232 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 6 ஆம் சுற்று முடிவில் வி.சி.க – 1,37,115, அ.தி.மு.க – 1,14,717, : பா.ம.க – 50,294, நாம் தமிழர் – 18,616 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் 22,398 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
திருச்சி மக்களவை தொகுதியில் மொத்த வாக்குகள் 12.30 மணி நேர நிலவரம்: 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதிமுக – துரை வைகோ – 145883, அதிமுக – கருப்பையா – 66,738, அமமுக – செந்தில்நாதன் – 30,985, நாதக – ராஜேஷ் – 30,335 வாக்குகள் பெற்றுள்ளனர். 79,145 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 6 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 20 704 வாக்குகள், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 17004 வாக்குகள், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 7842 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3435 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 6வது சுற்றின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 975 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் விசிக – 1,55,452 வாக்குகளும், அதிமுக – 1,25,167 வாக்குகளும், பாமக – 54,877 வாக்குகளும், நாம் தமிழர் – 20,031 வாக்குகளும் பெற்றுள்ளனர் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 30,285 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு இன்னும் பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் 7 சுற்றுகள் முடிவில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 1,58,400 வாக்குகள் பெற்றுள்ளார். அடுத்தபடியாக அதிமுக 1,17,776 ,பாஜக 62761, நாம் தமிழர் 31659. இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 40624 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 9வது சுற்றில் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார் வெங்கடேசன். மதுரை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 9வது சுற்று வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 21900 வாக்குகள், அதிமுக 11228 வாக்குகள், பாரதிய ஜனதா 11278 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 5110 வாக்குகள்.
திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 27839 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது. அதிமுக கூட்டணி 7292 வாக்குகள், பிஜேபி 9104 வாக்குகள், நாம் தமிழர் 4286 வாக்குகள், நோட்டா 754 வாக்குகளும் பெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.