India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை பாராளுமன்ற தொகுதியின் 6 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதல், திமுக கூட்டணி வேட்பாளர் செல்வராஜ் 25107 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 14615 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ரமேஷ் கோவித் 5130 வாக்குகளும், நாதக வேட்பாளர் 7117 வாக்குகளும் பெற்றுள்ளன. மொத்தமாக 63278 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் முன்னிலை வகித்து வருகிறார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி 9வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 60,021 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்தார்.
ராபர்ட் புரூஸ் (காங்) – 1,82,101
ஜான்சிராணி (அதிமுக) – 32,186
நயினார் நாகேந்திரன் (பாஜக) – 1,22,080
சத்யா (நாதக) – 35,353 வாக்குகள் பெற்றுள்ளனர். தொடர்ந்து எண்ணிக்கை நடைபெறுகிறது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் திமுக இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி 2,44,034 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் கனிமொழி முன்னணியில் இருந்து வருகிறார் . இந்நிலையில் பத்தாவது சுற்று முடிவில் அவர் அதிமுக வேட்பாளரை விட 1 லட்சத்து 76 ஆயிரத்து 012 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நெல்லை மாவட்டம் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது .தொடர்ந்து ஆறு தொகுதிகளிலும் இன்று காலை முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் இருந்து வருகிறார். தொடர்ந்து தற்போது எட்டாவது சுற்றில் 60 ஆயிரத்து 21 வாக்கு வித்தியாசத்தில் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் இருக்கிறார்.
காஞ்சிபுரம் தொகுதியின் 8 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில்,
திமுக – 207783 வாக்குகளும், அதிமுக – 130618 வாக்குகளும், பாமக – 57835 வாக்குகளும்,
நாம் தமிழர் – 41423 வாக்குகளும் பெற்றுள்ளன. இதன்படி திமுக வேட்பாளர் செல்வம் 77165 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தென்காசி மாவட்டம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க விருப்பம் இல்லாமல் நோட்டாவிற்கு 5316 வாக்குகள் மக்கள் செலுத்தியுள்ளனர். சங்கரன்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் வாசுதேவநல்லூர் கடையநல்லூர் பகுதி சேர்ந்த வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர். 1மணி இதுவரை தென்காசி மாவட்டத்தில் நோட்டா (NOTA) 5316 வாக்குகள் பதிவாகியுள்ளது.
தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 8 வது சுற்று நிலவரப்படி, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 161781 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் 149933 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 115285 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாதக-24446,NOTA-3261
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமரா 73,239 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 58,805 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ராமசந்திரன் 30,978 வாக்குகளும், நா.த.க வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 10,308 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவில் 1481 வாக்குகளும் பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காலை முதல் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 5, 6வது சுற்றில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் உள்ளார். 5வது சுற்றில் நவாஸ்கனி 2698, ஓபிஎஸ் 2882, 6வது சுற்றில் நவாஸ்கனி 3214, ஓபிஎஸ் 3232 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.