Tamilnadu

News June 4, 2024

கடலூர்: 1,65,951 வாக்குகளுடன் காங்.,முன்னிலை

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் (இன்று 12.50 மணி நிலவரப்படி) காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சி – 1,65,951, தே.மு.தி.க – 1,02,939, பா.ம.க – 73,023, நா.த.க – 21,010 இதுவரை பெற்றுள்ளது. இந்த நிலையில் காலை முதல் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார்‌.

News June 4, 2024

தேமுதிக- காங்கிரஸ் கடும் போட்டி

image

விருதுநகர் தொகுதியில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேமுதிக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேமுதிகவின் விஜய பிரபாகரன், காங்கிரசின் மாணிக்கம் தாகூரை விட 32 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

கள்ளக்குறிச்சி:முன்னிலையில் உள்ள திமுக வேட்பாளர்

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 11ம் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 2,84,146,அதிமுக குமரகுரு – 2,54,620,பாமக தேவதாஸ் – 35,897,நாமக ஜெகதீசன் – 35,920, இதில் திமுக வேட்பாளர் – 26,243 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

News June 4, 2024

36,727 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 13ம் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 3,09,991,அதிமுக குமரகுரு – 2,76,932,பாமக தேவதாஸ் – 39,467,நாதக   ஜெகதீசன் – 39,064, இதில் திமுக வேட்பாளர் – 33,727 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

திருவாரூர்: 6 ஆவது சுற்று முடிவுகள்

image

திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாகை பாராளுமன்ற தொகுதியின் 6 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதல் திமுக கூட்டணி வேட்பாளர் செல்வராஜ் 25107 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 14615 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ரமேஷ் கோவித் 5130 வாக்குகளும், நாதக வேட்பாளர் 7117 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தமாக 63278 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்

News June 4, 2024

தென்காசி பாராளுமன்ற தொகுதி 1 மணி நிலவரம்!

image

தென்காசி பாராளுமன்ற தொகுதி தென்கா,சி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளில் என்னப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம். தற்போது 1 மணி நிலவரப்படி, திமுக, 152018, அதிமுக, 78332, பாஜக,73252, நாத, 43178 தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் திமுக வேட்பாளர் வெற்றியை கொண்டாட தயாராகும் திமுக தொண்டர்கள்.

News June 4, 2024

10வது சுற்று 26,243 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 10வது சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 2,56,933,அதிமுக குமரகுரு – 2,30,690,பாமக தேவதாஸ் – 31,977,நாமக ஜெகதீசன் – 32,418, இதில் திமுக வேட்பாளர் – 26,243 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

News June 4, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரயில் வசதி 

image

பெரம்பலூர் எண்ணிக்கை மையத்தை பார்வையிட வந்த அருண் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதல்வரின் உழைப்புக்கும் , திட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி. பெரம்பலூர் மாவட்டத்திற்க்கு ரயில் வசதி கொண்டு வருவேன் என தெரிவித்தார். 

News June 4, 2024

திருவள்ளூர் தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் தேமுதிக

image

திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 27104 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது. அதிமுக கூட்டணி 7764 வாக்குகள், பிஜேபி 8681 வாக்குகள், நாம் தமிழர் 3947 வாக்குகள், நோட்டா 761 வாக்குகளும் பெற்றுள்ளன.

News June 4, 2024

அரக்கோணத்தில் ஓங்கியது இவரது ‘கை’

image

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்: சட்டமன்ற தொகுதி வாரியாக ராணிப்பேட்டை திமுக: 4589 அதிமுக:1744 பாமக:1501 நாதக:673, ஆற்காடு திமுக:4658 அதிமுக:2157 பாமக:2606 நாத:670, அரக்கோணம் திமுக:4911 அதிமுக:2253 பாமக:1916 நாத:970, திருத்தணி திமுக:5416 அதிமுக:2195 பாமக:1095 நாத:665, காட்பாடி திமுக:3918 அதிமுக:2113 பாமக:1655, சோளிங்கர் திமுக:4534 அதிமுக:2444 பாமக:1959

error: Content is protected !!