Tamilnadu

News June 4, 2024

தமிழச்சி தங்கபாண்டியன் 26,779 வாக்குகள் முன்னிலை!

image

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் 12 மணி நிலவரப்படி சுமார் 62,316 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். மேலும் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் 35,537 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

ஈரோட்டில் இவரது ‘கை’ ஓங்கியது!

image

ஈரோடு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஏழாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகியுள்ளது. திமுக 78,715 வாக்குகள் வித்தியாசத்தில் ஏறுமுகத்தில் உள்ளது. கட்சிகள் பெற்ற வாக்குகள் நிலவரம்:
திமுக – 1,83,698
அதிமுக – 1,04,983
நாம் தமிழர் – 27,221
தமாகா – 23,264
தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. திமுகவினர் தற்போது வெற்றிக் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.

News June 4, 2024

பொள்ளாச்சி : 3வது சுற்று முடிவுகள்

image

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வர சாமி மூன்றாவது சுற்றில் 24934 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 15925 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக 11626 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி 3070 வாக்குகள் பெற்றுள்ளார்.
மூன்றாம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வர சாமி வாக்குகள் 25863 முன்னிலை பெற்றுள்ளார்.
நோட்டாவுக்கு 774 வாக்குகள் பதிவானது

News June 4, 2024

கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

image

கடலூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 177270 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் தேமுதிக 109873 ஓட்டுகளும், பாமக 76359 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக 21910 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.

News June 4, 2024

6 வது சுற்றில் திமுக முன்னிலை

image

தென்காசி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அங்குள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. தற்போது ஆறாவது சுற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம். திமுக-12,6566,அதிமுக 63,268, பாஜக- 50,029, நாத- 35,272 ,தொடர்ந்து திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 63298 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

நாகப்பட்டினம் தொகுதி நான்காவது சுற்று நிலவரம்

image

நாகை பாராளுமன்ற தொகுதியின் 4 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், திமுக + இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் 24518 வாக்குகளும், அதிமுக சுர்ஜித்சங்கர் 13855 வாக்குகளும், பாஜக எஸ் ஜி எம் ரமேஷ்4319 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி கார்த்திகா -6977 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தமாக 4 சுற்றுகள் முடிவில் 44642 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ முன்னிலையில் உள்ளது.

News June 4, 2024

சிதம்பரம்: திருமாவளவன் தொடர்ந்து முன்னிலை

image

சிதம்பரம் மக்களவை தொகுதியில் 2வது முறையாக போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரை விட 5வது சுற்றில் 23 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் நிலையில், திருமாவளவனின் ஆதரவாளர்கள், கூட்டணி கட்சியினர் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

News June 4, 2024

புதுவை தேர்தல் குறித்த நிலவர பட்டியல்

image

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி 12.30 மணி முடிவின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வைத்தியலிங்கம் 1,40,925 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நமச்சிவாயம் 1,12,442 பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

மயிலாடுதுறை ஏழாம் சுற்று நிலவரம்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 7 சுற்றுகள் முடிவடைந்துள்ளது. ஏழாம் சுற்று முடிவில் காங்கிரஸ் 173893 வாக்குகளும், அதிமுக 83,835 வாக்குகளும், பாமக 61,417 வாக்குகளும், நாதக 41,340 வாக்குகளும் பெற்றுள்ளன. திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா 90058 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். நோட்டாவில் 2662 ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

News June 4, 2024

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு

image

புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு தொகுதிகுட்பட்ட காட்டேரிக்குப்பம் பகுதி, 1/33 என்ற பூத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்து உள்ள நிலையில், அந்த பூத்தில் விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!