Tamilnadu

News August 19, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சி வகுப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆட்சியர் ஆய்வு

image

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, இன்று (19.08.2025) ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பழைய பேருந்து நிலைய சாலை, சக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்.இந்த நிகழ்வில் துறை சார்ந்த அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர். அப்போது பொதுமக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

News August 19, 2025

திருப்பத்தூர்: ரயில்வே துறையில் வேலை! APPLY NOW

image

திருப்பத்தூர் இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், விவரங்களுக்கு https://rrccr.com/ என்ற இணைதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை பெற விரும்பும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 19, 2025

தூத்துக்குடி மாணவர்கள் கவனத்திற்கு…

image

தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து தூத்துக்குடி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பல்வேறு உதவி தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 2025-26 கல்வி ஆண்டிற்கான கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆகஸ்ட்.15 முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் https://umis.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் ‌

News August 19, 2025

௹.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

image

தூத்துக்குடி கியூ பிரான்ச் போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மச்சாதுபாலம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு ஒரு சரக்கு வாகனத்தில் இலங்கை கடத்துவதற்காக ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1500 கிலோ எடை கொண்ட 43 மூடைகளில் பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.

News August 19, 2025

மாதம் ரூ.750 உதவித்தொகையுடன் இலவச பயிற்சி!

image

கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) பல்வேறு பிரிவுகளுக்கான இலவசப் பயிற்சிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். இதற்கு பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. மாதம் ₹750 உதவித்தொகை,விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், வழங்கப்படும்.விருப்பமுள்ள மாணவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

தஞ்சை ஆட்சியர் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதுக்கு தேர்வு

image

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான பல்வேறு உதவிகளைப் பெற்றுத் தந்ததற்காகவும், அவர்களுடைய நலனுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காகவும் 2025- ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News August 19, 2025

உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ள இடங்கள்

image

சிவகங்கை மாவட்டம்,  “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஆகஸ்ட்-20,  நாளை நடைபெறவுள்ள இடங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே அறிவிக்கப்பட்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு, நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளிடம் தங்கள் மனுக்களை கொடுத்து பதிவு செய்யுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

News August 19, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட.19) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.54 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.50 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.82 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.92 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 858 கன அடி, பெருஞ்சாணிக்கு 392 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

News August 19, 2025

மனநல நிறுவனங்கள் பதிவு செய்ய ஆட்சியர் வேண்டுகோள்

image

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும். விண்ணப்பிக்க தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!