Tamilnadu

News June 4, 2024

நான்காவது சுற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

தூத்துக்குடியின் நாடாளுமன்ற தொகுதியின் வாக்குகள் இன்று தூத்துக்குடியில் அரசு பொறியியல் கல்லூரியின் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் நான்காவது சுற்று முடிவில் திமுக – 28,260 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 8205 வாக்குகள்  பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 4, 2024

ஸ்ரீபெரும்பத்தூர்: 7ஆவது சுற்றில் திமுக முன்னிலை

image

ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி 7வது சுற்று விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 186608 ஓட்டுகள் பெற்று முதல் இடத்திலும்,
அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் 69834 பெற்று இரண்டாவது இடத்திலும்,
வேணுகோபால் (பாஜக – தமாகா) – 49396 மூன்றாம் இடத்திலும்,
நாதக வேட்பாளர் ரவிச்சந்திரன் 37365 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளனர்.

News June 4, 2024

சென்னையில் திமுக தொடர்ந்து முன்னிலை!

image

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என 3 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி 73,996 வாக்குகளும், தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் 50,641 வாக்குகளும், மத்திய சென்னை வேட்பாளர் 68,507 வாக்குகளும் பெற்று முன்னிலையில் உள்ளனர்.

News June 4, 2024

நெல்லை: வெளியேறினார் நயினார் நாகேந்திரன்

image

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதை தொடர்ந்து நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சுமார் 40,000 வாக்குகளுக்கும் கீழே பின்தங்கியதால் உடனடியாக நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேறினார். இதனால் அங்கு பாஜக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

News June 4, 2024

5 ஓபிஎஸ்களின் நிலை என்ன?

image

ராமநாதபுரத்தில் போட்டியிட்ட 5 ஓபிஎஸ்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதில் ஓ.பன்னீர்ச்செல்வம்-37,731 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், ஒச்சப்பன் பன்னீர்செல்வம்- 416, ஒய்யாதேவர் பன்னீர்செல்வம்- 206 வாக்குகளும், ஒய்யாரம் பன்னீர்செல்வம்- 157, ஒச்சாதேவர் பன்னீர்செல்வம் 79 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரப்படுகிறது.

News June 4, 2024

2.40 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் திமுக இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி 10 ஆவது சுற்று முடிவில் 2,40,184 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதனை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து 11 ஆவது சுற்று எண்ணப்பட்டு வருகிறது.

News June 4, 2024

நெல்லை ஐந்தாவது சுற்றில் திமுக முன்னிலை

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 5வது சுற்றில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 35,543 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை
காங். – 1,15,762
பாஜக – 80,219
நாதக – 22,715
அதிமுக – 21,651
5ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது.
இதுவரை எண்ணிய மொத்த வாக்குகளாக 2,51,807 உள்ளது.

News June 4, 2024

திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் திமுக முன்னிலை

image

திருபத்தூர் பகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் தற்போதைய முன்னனி நிலவரம் வெளியாகியுள்ளது.
திமுக வேட்பாளர் 75036, அதிமுக வேட்பாளர் 47317,
பாஜக வேட்பாளர் 25829, நாத வேட்பாளர் 12905 வாக்குகள் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

கிருஷ்ணகிரி :9வது சுற்று நிலவரம்

image

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் முன்னிலையில் உள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்- 83184 வாக்குகள் பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 52631 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

பாஜக : 41836

நாம் தமிழர்: 16908

காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் மூன்றாவது சுற்று முடிவில் 30553 வாக்குகள் முன்னிலை

News June 4, 2024

திருச்சி: 6ஆம் சுற்று முடிவுகள்

image

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் 12.30 pm மணி நேர நிலவரம்:
6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மதிமுக – துரை வைகோ – 145883, அதிமுக – கருப்பையா – 66,738, அமமுக – செந்தில்நாதன் – 30,985, நாதக – ராஜேஷ் – 30,335 வாக்குகள் பெற்றுள்ளனர். 79,145 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

error: Content is protected !!