Tamilnadu

News June 4, 2024

கடலூர் நான்காம் சுற்று நிலவரம்

image

கடலூர் நாடாளுமன்ற தேர்தல் 4 சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை.கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 101379 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.அவரை அதிர்ந்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 69650 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
31729 வாக்குக்கள் வித்தியாசத்தில் -காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை

News June 4, 2024

தஞ்சாவூரில் 4வது சுற்று நிலவரம்

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முரசொலி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். நான்காவது சுற்று – திமுக முன்னிலை,
திமுக – 23,480, தேமுதிக – 10,034, பாஜக – 7,828, நாத – 5,878, 13,446 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகுக்கிறது.

News June 4, 2024

17,000 வாக்கு வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் 2 சுற்றுகள் முடிவில்
இ.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுப்பராயன் 69559 வாக்குகள் பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக
அதிமுக 52397, பாஜக 24305, நாம் தமிழர் 13299பெற்றுள்ளனர். இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 17,162வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

விஜயபிரபாகரன் தொடர் முன்னிலை

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 3ஆவது சுற்றில் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 17,450 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 22,597 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 6651 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 4570 வாக்குகளும் பெற்றுள்ளனர். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 7853 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

துரை வைகோ 38,705 வாக்குகளுடன் முன்னிலை

image

திருச்சி மக்களவை தொகுதியில் 11 மணி நிலவரப்படி மதிமுக வேட்பாளர் துரை வைகோ 74,475 வாக்குகள் பெற்று 38,705 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 35,770 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 13,052 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 17,083 வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

மயிலாடுதுறை மூன்றாம் சுற்று நிலவரம்

image

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகித்து வருகிறார்
மூன்றாம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் சுதா 72,233 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாபு 36,551 வாக்குகள் பெற்றுள்ளார்.காங்கிரஸ் வேட்பாளர் சுதா அதிமுக வேட்பாளர் பாபுவை விட 35,682 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.நோட்டா 1084 வாக்குகள் பெற்றுள்ளது.

News June 4, 2024

3வது சுற்றில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 3வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 82,246 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 31,999 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 17,830 வாக்குகளும், நாதக வேட்பாளர் 17,031 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 50,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

குறைந்து வரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம்

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் இரண்டு சுற்றுகள் முடிவில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் 10830 வாக்குகளே கடந்த தேர்தலை விட நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

News June 4, 2024

திருச்சியில் தொடர்ந்து திமுக முன்னிலை

image

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று காலை 11.12 மணி நேர நிலவரபடி, திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துறை வைகோ – 74,475, அதிமுக – கருப்பையா – 35,770, அமமுக – செந்தில்நாதன் – 13,052, நா த க – ராஜேஷ் – 17,083, 38,705 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

திமுக வேட்பாளர் மலையரசன் தொடர்ந்து முன்னிலை

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஆறு சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக வேட்பாளர் மலையரசன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் குமரகுருவை விட 17309 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். 6 சுற்று முடிவில் திமுக -மலையரசன் 151953 பெற்ற வாக்குகள் பெற்றுள்ளார்.

error: Content is protected !!