Tamilnadu

News June 4, 2024

திருச்சி துரை வைகோ தொடர் முன்னிலை

image

திருச்சி பாராளுமன்ற தொகுதி, மொத்த வாக்குகள் இன்று காலை 11.30 மணி நேர நிலவரபடி, திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துறை வைகோ – 98,62, அதிமுக – கருப்பையா – 45815, அமமுக – செந்தில்நாதன் – 17,459, நாதக – ராஜேஷ் – 21,280, 58,807 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

News June 4, 2024

கோவை: வைரலாகும் போலி செய்தி

image

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பாகம் எண் 4-ல் 1 வாக்கு மட்டுமே கிடைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் பொய்யானது. கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 4-ல் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 101 வாக்குகள் பெற்றுள்ளார் என்பதுதான் உண்மை.

News June 4, 2024

துரை வைகோ 38,705 வாக்குகளுடன் முன்னிலை

image

திருச்சி மக்களவை தொகுதியில் 11 மணி நிலவரப்படி மதிமுக வேட்பாளர் துரை வைகோ 74,475 வாக்குகள் பெற்று 38,705 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 35,770 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 13,052 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 17,083 வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

பொள்ளாச்சி இரண்டாம் சுற்று முடிவு

image

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில்,
2-வது சுற்று முடிவில்,
பொள்ளாச்சி – திமுக 7108- அதிமுக- 4757 பாஜக- 4554, கிணத்துக்கடவு-திமுக 8787, அதிமுக 5675, பாஜக 6491
மடத்துக்குளம்- திமுக 4122 , அதிமுக 2350, பாஜக 1272, தொண்டாமுத்தூர்-திமுக 8790, அதிமுக 7850, பாஜக 3831
வால்பாறை-திமுக 4610, அதிமுக 2566, பாஜக 1690, உடுமலை- திமுக 3855, அதிமுக 2306, பாஜக 1137 வாக்குகள் பதிவாகியுள்ளது

News June 4, 2024

ஸ்ரீபெரும்பத்தூர் : 2ஆம் சுற்று முடிவு

image

ஸ்ரீபெரும்பத்தூர் மக்களவை தொகுதியை உள்ளடக்கிய 3ஆம் சுற்று முடிவு வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 82,246 வாக்குகள் பெற்று 50,247 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 31,999 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 17, 031 வாக்குள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். தமாகா வேட்பாளர் 17,830 வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

ஈரோட்டில் திமுக முன்னிலை

image

ஈரோடு மாட்டத்தில் 2ஆம் சுற்று முடிவில் திமுக 35867 ஓடுகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக 16,112 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்திலும், தமாகா 4,288 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்திலும், நாதக 5431 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
திமுக வேட்பாளர் கேஇ பிரகாஷ் 19755 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

தென் சென்னை: கணிசமான வாக்குகளை பெற்ற தமிழிசை!

image

தென் சென்னையில் 51,842 வாக்குகளை பெற்று 2 ஆம் இடத்தில் நீடிக்கிறார் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன். வட சென்னையில் திமுக – பாஜக வேட்பாளர்கள் இடையே பெரிய அளவில் வாக்கு வித்தியாசம் இருக்கும் நிலையில், தென் சென்னையில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார் தமிழிசை. இவர், மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

திண்டுக்கல்:நாலாவது சுற்றிலும் முன்னிலை

image

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 4வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-129770, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-44279,
பாமக வேட்பாளர் திலகபாமா -19845, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-18307 வாக்குகள் பெற்றுள்ளனர். 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை.

News June 4, 2024

செங்கல்பட்டு; 2 வது சுற்று முடிவு

image

செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளை (திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம்) உள்ளடக்கிய காஞ்சிபுரம் தொகுதியில் (செங்கல்பட்டு, இரண்டாவது சுற்று நிலவரப்படி திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் திமுக 52669 வாக்குகளும், அதிமுக 34693 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 11507 வாக்குகளும், பாமக 15255 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இதன்படி, திமுக வேட்பாளர் க.செல்வம் 17976 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

வேட்பாளர்களுக்கு நிகராக வாக்கு வாங்கும் நோட்டா

image

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 4வது சுற்று நிறைவடைந்தது. இந்நிலையில் முன்னணி கட்சி நிர்வாகிகள் உட்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேச்சை வேட்பாளர்களை விட நோட்டா அதிகமான வாக்குகளை பெற்று வருகிறது. நோட்டா பெற்ற வாக்கு 4399 ஆகும்.

error: Content is protected !!