India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மக்களவை தொகுதி 3-வது சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது.திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 69860 வாக்குகள் பெற்றுள்ளார்.அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 67671 வாக்குகள் பெற்றுள்ளார்.பாஜக வேட்பாளர் ராமலிங்கம்-13977 வாக்குகள் பெற்று பின்ன்னடைவை சந்தித்துள்ளார் .
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி 9வது சுற்றின் முடிவில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி 79,568 வாக்குகளும், பாஜக கூட்டணி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 44,094 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் 17,883 வாக்குகளும், நாம் தமிழர் 13,694 வாக்குகள் பெற்று உள்ளனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் இருந்து வருகிறார் . தற்போது இரண்டாவது சுற்று அதிகாரப்பூர்வ முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் திமுக வேட்பாளர் கனிமொழி 28418, அதிமுக வேட்பாளர் 7226 வாக்குகள் பெற்றுள்ளனர்.
திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியின் 2 ஆவது சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, திமுக கூட்டணி வை. செல்வராஜ் 52531 வாக்குகளும், அதிமுக கூட்டணி சுர்ஜித் சங்கர் 29262 வாக்குகளும், பாஜக ரமேஷ் 9276 வாக்குகளும், நாதக கார்த்திகா 13623 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி 6வது சுற்று விவரம்:
டி.ஆர்.பாலு (திமுக) – 160498
பிரேம் குமார் (அதிமுக) – 59009
வேணுகோபால் (பாஜக – தமாகா) – 41810
ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) – 31811
திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 101489 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 5 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. ஐந்தாம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 1,20,927 வாக்குகளும், அதிமுக 61,764 வாக்குகளும், பாமக 46,396 வாக்குகளும் நாதக 29,504 வாக்குகளும் பெற்றுள்ளன. 59,163 வாக்குகள் கூடுதலாக பெற்று இந்தியா கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலையில் உள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை முடிந்த சுற்றுக்களில் திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அவர் 1 லட்சத்தி 74 ஆயிரத்து 044 வாக்குகள் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் ஐந்தாவது சுற்று முடிவில் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. திமுக – 1,23,574, தேமுதிக – 49,174, பாஜக – 38,707, நாத – 32,114, 74,400 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக 11,5065 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் திமுக 97678 ஓட்டுகளும், அதிமுக 78697 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக 16791 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 4ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், திமுக கூட்டணி (காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்-82182, அதிமுக (சேவியர் தாஸ்-43950, பாஜக வேட்பாளர் தேவநாதன்-31651, நாதக வேட்பாளர் எழிலரசி-28146, 4வது சுற்று முடிவில் 38232 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம்
முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.