India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் 2வது முறையாக போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரை விட 5வது சுற்றில் 23 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் நிலையில், திருமாவளவனின் ஆதரவாளர்கள், கூட்டணி கட்சியினர் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி 12.30 மணி முடிவின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வைத்தியலிங்கம் 1,40,925 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நமச்சிவாயம் 1,12,442 பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 7 சுற்றுகள் முடிவடைந்துள்ளது. ஏழாம் சுற்று முடிவில் காங்கிரஸ் 173893 வாக்குகளும், அதிமுக 83,835 வாக்குகளும், பாமக 61,417 வாக்குகளும், நாதக 41,340 வாக்குகளும் பெற்றுள்ளன. திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா 90058 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். நோட்டாவில் 2662 ஓட்டுகள் பதிவாகியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு தொகுதிகுட்பட்ட காட்டேரிக்குப்பம் பகுதி, 1/33 என்ற பூத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்து உள்ள நிலையில், அந்த பூத்தில் விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மக்களவை தொகுதியில் 4-வது சுற்றில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி 107884 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் . இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 95437 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.சேலம் மக்களவைத் தொகுதியில் 12447 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் டி. எம் செல்வ கணபதி முன்னிலை.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. திமுக வேட்பாளர் அருண் நேரு 30,026 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 10,691 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். ஐஜேகே 8331 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 5,308 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் 6 சுற்றுகளில் முடிவில் இந்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுப்பராயன் 137799 வாக்கு பெற்றார். அதிமுக 102634, பாஜக 52770 , நாம் தமிழர் 27084,இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 35165 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-253118, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-83812, பாமக வேட்பாளர் திலகபாமா – 41492, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-34962 வாக்குகள் பெற்றுள்ளனர். சச்சிதானந்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு முன்னிலை வகிக்கிறார்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி 13வது சுற்றின் முடிவில் நவாஸ்கனி, 109228 ஓட்டுகள் பெற்று முதலிடத்திலும், ஓ.பன்னீர்செல்வம்- 60100 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள், 25751 பெற்று மூன்றாவது இடத்திலும், நாம் தமிழர் – 19300 வாக்குகள் பெற்று உள்ளனர்.
கோவை மக்களவைத் தொகுதியில் மூன்றாவது சுற்று முடிவு: திமுக – 26460, பாஜக – 19868, அதிமுக – 10487, நாதக – 3747, நோட்டா -578, வாக்குகள் பெற்றுள்ளனர். மொத்த எண்ணிக்கை: 62100 வாக்குகள்
Sorry, no posts matched your criteria.