Tamilnadu

News June 4, 2024

நாமக்கல்: தொடர் பின்னடைவு – அதிருப்தி

image

நாமக்கல் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமலிங்கம் இதுவரை நடைபெற்ற 5 சுற்றுகளில் திமுகவை விட குறைவான வாக்குகளை பெற்று பின்தங்கி வருகிறார். இதனால், பாஜக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், பாஜக முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர்..

News June 4, 2024

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி 8வது சுற்று

image

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு செல்லூரில் உள்ள பாரதிதாசன் கலைக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது. சிபிஐ – 24588
அதிமுக -13635
பாஜக – 5325
நதக – 68508 சுற்றுகள் முடிவில் மொத்தம்

சிபிஐ – 198079,அதிமுக -113765, பாஜக – 39953, நாதக- 57373. 84314 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் முன்னிலை பெற்றுள்ளார்.

News June 4, 2024

தென்காசி: 98 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் திமுக!

image

தென்காசி மக்களவைத் தொகுதியின், 8 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுகவை சேர்ந்த ராணி ஸ்ரீ குமார் 1,93,552 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 95,320 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 90,796 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். 51,755 வாக்குகள் பெற்று நாம் தமிழர் வேட்பாளர் இசை மதிவாணன் 4 ஆவது இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

41,756 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 15ம் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 3,90,839, அதிமுக குமரகுரு – 3,49,083, பாமக தேவதாஸ் – 48,861, நாதக ஜெகதீசன் – 49,376 ஓட்டுகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் 41,756 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

9வது சுற்று: வியத்தகு முன்னேற்றம்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 9வது சுற்று முடிவுகள் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
காங்கிரஸ் – 207195
பாஜக – 134919
அதிமுக – 36276
நாதக – 39707
வாக்கு வித்தியாசம்- 72276 ( காங்கிரஸ் முன்னிலை). காங்கிரஸ் வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

News June 4, 2024

பொள்ளாச்சி : 7 வது சுற்று முடிவு

image

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வரசாமி 7ஆவது சுற்றில்
23915 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் அ. கார்த்திகேயன் 14066 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கே.வசந்தராஜன் 13530 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நா. சுரேஷ்குமார் 2855 வாக்குகள் பெற்றுள்ளார். 7ஆவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வர சாமி வாக்குகள் 61397 முன்னிலை

News June 4, 2024

60021 வாக்கு வித்தியாசத்தில் இந்திய கூட்டணி

image

திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரி நடைபெற்று வருகின்றது. இதில் எட்டாவது சுற்று முடிவில் 60021 வாக்குகள் பெற்று இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் உள்ளார். இதன் காரணமாக திருநெல்வேலியில் இந்திய கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

News June 4, 2024

எம்பி போனாலும் பரவாயில்லை எம்எல்ஏ பதவி இருக்கு

image

நெல்லை மாவட்டம் பாராளுமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்பே தனது தேர்தல் பணியை தொடங்கினார். பிரதமர் மோடியே வந்து அவருக்காக பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அவர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு 60,000 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். எம்பி போனாலும் அவருக்கு எம்எல்ஏ பதவிஇருப்பது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

மூன்றாவது இடத்தை தக்கவைக்கும் நாதக

image

திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்று வருகின்றது. இதில் ஒன்பதாவது சுற்று முடிவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 35,353 வாக்குகள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளார். இதன் காரணமாக அதிமுக நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

News June 4, 2024

காஞ்சிபுரம் 9வது சுற்று நிறைவு

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் 9வது சுற்று நிறைவு பெற்றது. திமுக – 231600, அதிமுக – 146107, பாமக – 65134, நாம் தமிழர் – 45335, திமுக வேட்பாளர் செல்வம் 85493 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

error: Content is protected !!