India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 9 ஆம் சுற்று முடிவில் வி.சி.க – 2,09,735, அ.தி.மு.க – 1,66,648, பா.ம.க – 71,996, நாம் தமிழர் – 27,048, வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 43,249 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
மதுரை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 14வது சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22,283 வாக்குகள், அதிமுக 9,525 வாக்குகள், பாரதிய ஜனதா 12,611 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 4,258 வாக்குகள் பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வாக்குகள் பெற்று 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி, “தேர்தலில் வெளிவரும் முடிவுகளால், தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. 3 வருட திமுகவின் நல்லாட்சிக்கான அங்கீகாரத்தை மக்கள் அளித்துள்ளார்கள்” என்றார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் இன்று (ஜூன் 4) காலை 8:00 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கை குறித்து விவரம் வெளியாகி உள்ளது. அதில் 900 வாக்குகளுக்கு மேலாக செல்லாத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மக்களவைத் தொகுதியில், 2.30 மணி நேர நிலவரப்படி எண்ணப்பட்ட மொத்த வாக்குகள் விவரம்:
10 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி,
மதிமுக – துரை வைகோ – 2,62,511
அதிமுக – கருப்பையா – 1,09,762
அமமுக – செந்தில்நாதன் – 55,547
நா.த.க – ராஜேஷ் – 49759
1,52,749 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 8 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 9 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் 245151 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 128567 வாக்குகள், பாஜக வேட்பாளர் 70423 வாக்குகள், நாதக வேட்பாளர் 34910 வாக்குகள் பெறறுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி நாடாளுமன்றத் பகுதியில் திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். மேலும், டிடிவி தினகரன் 2அவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி தொடர்ந்து 3ஆவது இடத்தில் வருகின்றனர்.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில், 2 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 1,37,318 வாக்குகள் பெற்று ஏறுமுகத்தில் உள்ளார். பாஜக வேட்பாளரான வினோஜ் பி.செல்வம் 64,269 வாக்குகள் பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளார். 23,544 வாக்குகளுடன் தேமுதிக வேட்பாளர்(அதிமுக கூட்டணி) 3 ஆவது இடத்தில் உள்ளார்.
தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 2:30 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 24 வேட்பாளர்களில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 2,56,828 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் 1,96,064 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 1,79,410 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 11வது சுற்றில் காங்., வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 76,598 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். காங், – 2,50,015, பாஜக – 1,73,417, நாதக – 48,395, அதிமுக – 44,786 11ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது. இதுவரை எண்ணிய மொத்த வாக்குகள்: 5,42,597
Sorry, no posts matched your criteria.