Tamilnadu

News June 4, 2024

ஆரணி 8 ஆவது சுற்று முன்னிலை

image

திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 8 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 1,87,157 வாக்குகளும், அதிமுக – 1,10,884 வாக்குகளும், பாமக – 92,027 வாக்குகளும், நாதக- 25,860 வாக்குகளும் பெற்றுள்ளன.
தொடர்ந்து திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 76,273 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்துள்ளார்

News June 4, 2024

தர்மபுரி: திமுக வேட்பாளர் முன்னிலை

image

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 3: 20 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஆ.மணி 2,79,914 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 2,69,762 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 1,90,647 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

கிருஷ்ணசாமி vs ஜான்பாண்டியன் கடும் போட்டி

image

2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசி தொகுதியில் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. மேலும், புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியனும் போட்டியிட்டனர். இதில், 2ஆவது இடத்திற்கு 2 வேட்பாளருக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

News June 4, 2024

42,385 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 16ம் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 4,14,116, அதிமுக குமரகுரு – 3,71,730, பாமக தேவதாஸ் – 52,656, நாதக ஜெகதீசன் – 52,508 ஓட்டுகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் – 42,385 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

பொள்ளாச்சி : 10 வது சுற்றில் திமுக முன்னிலை

image

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வர சாமி 10 வது சுற்றில் 25,978 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 12,596 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக 10,651 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 2828 வாக்குகள் பெற்றுள்ளார். 10-வது சுற்று முடிவில் திமுக 96648 முன்னிலை பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 717 வாக்குகள் பதிவானது.

News June 4, 2024

சிவகங்கை தொகுதியில் 11வது சுற்று முடிவு

image

சிவகங்கை மக்களவை தொகுதியில் 11வது சுற்று முடிவில் கார்த்தி சிதம்பரம் 2,18,694 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் 1,18,655 வாக்குகளும், பாஜக வேட்பாளர் தேவநாதன் 89,976 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி 79,543 வாக்குகள் பெற்றுள்ளார். 11 வது சுற்று முடிவில் கார்த்திக் சிதம்பரம் 1,00039 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

திருவள்ளூர்: தேர்தலில் சாதித்த ஐஏஎஸ்… யார் இவர்?

image

பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் முடிவு வெளிவந்த வண்ணம் உள்ளது. திருவள்ளூரில் காங். சார்பில் போட்டியிட்ட Ex ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் அபார வெற்றியை நோக்கி உள்ளார். கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், தேசத்தை காக்க அரசியலில் குதித்தார். ஹிஜாப், ஊழல், முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து என பல்வேறு பிரச்சனைகளில் தனது குரலை அழுத்தமாக பதிவுசெய்தவர். தற்போது ராகுலின் ‘கை’க்கு பலம் சேர்த்துள்ளார்.

News June 4, 2024

காங்கிரஸ் வேட்பாளருக்கு பெருகும் வாக்குகள்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 13 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை தற்போது நிறைவு பெற்றுள்ளது. அதில், காங்கிரஸ் 3,26,372, அதிமுக 1,48,367 , பா.ம.க 1,07,716 , நா.த.க 77,887 வாக்குகள் பெற்றுள்ளன. மொத்தமாக 1,78,005 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

ஆரணி: 7 வது சுற்று முடிவுகள்

image

திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 7 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 1,61,328 வாக்குகளும், அதிமுக – 96,615 வாக்குகளும்,
பாமக – 82,439 வாக்குகளும், நாதக- 23,076 வாக்குகளும் பெற்றுள்ளன. ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 7 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 64,713 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

8 ஆவது சுற்றில் 89,158 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

image

வேலூர் தொகுதியில் 8 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,42,092 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம்1,52,934 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 46,181 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 8 சுற்று முடிவில் 89, 158 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.

error: Content is protected !!