India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் 16-ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 4,74,260 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 1,31,830 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பாலகணபதி 1,35,538 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஸ் சந்தர் 68,814 வாக்குகளும் பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 13 ஆம் சுற்று முடிவில் விசிக – 3,01,599, அதிமுக – 2,41,876, பாமக – 1,10,002, நாம் தமிழர் – 37,812 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 59,723 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 9 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 2,11,483 வாக்குகளும், அதிமுக – 1,25,678 வாக்குகளும், பாமக 1,03,274 வாக்குகளும், நாதக- 29,032 வாக்குகளும் பெற்றுள்ளன. இதன்படி திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 85,805 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 9 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 2,11,483 வாக்குகளும், அதிமுக – 1,25,678 வாக்குகளும், பாமக 1,03,274 வாக்குகளும், நாதக- 29,032 வாக்குகளும் பெற்றுள்ளன. இதன்படி திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 85,805 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக ராஜபாளையத்தில் 81558 வாக்குகள், ஸ்ரீவில்லிபுத்தூரில் 77789வாக்குகள், சங்கரன்கோவிலில் 85404வாக்குகள், வாசுதேவநல்லூரில் 83602வாக்குகள், கடையநல்லூரில் 80719 வாக்குகள், தென்காசியில் 86057 வாக்குகள் இன்று மாலை நிலவரப்படி பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 4,25,178 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,27,222, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயசீலன் 92076 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெவீனா ரூத் ஜேன் 88,884 வாக்குகளும் பெற்றுள்ளனர். எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட கனிமொழி வாக்குகள் அதிக வித்தியாசத்தில் உள்ளதால் அவர் வெற்றி உறுதியானது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 15ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -3,74,529, தேமுதிக -2,24,741, பாமக -1,69,122. 1,49,788 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 16 சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில் எண்ணப்பட வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கையை விட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் சு.வெங்கடேசனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 சுற்று முடிவில் சு.வெங்கடேசன் 1லட்சத்தி 76ஆயிரத்தி 536 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் – 177710 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அதிமுக 112195 ஓட்டுகளும், பாஜக – 86562 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக- 36832 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 12-வது சுற்று முடிவுகளில், திமுக கூட்டணி (காங்கிரஸ்) :311320, அதிமுக / கூட்டணி (அதிமுக) :222381, வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 88,939 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தங்கவேல் கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.