India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி 303317 வாக்குகள் பெற்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் 201850 ஐ விட 101467 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் 61800 பெற்றுள்ளனர்.இதில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் கடும் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில், 17வது சுற்று விவரம்:
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 1,33,196 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் – 3,96,486 வாக்குகள்
பா.ஜ.க – 2,63,290 வாக்குகள்
அதிமுக – 70,205 வாக்குகள்
நா.த.க. – 69,740 வாக்குகள்
நாம் தமிழரை பின்னுக்கு தள்ளி, 17வது சுற்று முடிவில் அதிமுக 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட மொத்த வாக்குகள் 8,35,250.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலையில் உள்ளார். இந்த முறை வெற்றிபெற்றால் 2வது முறையாக விழுப்புரம் எம்பியாக தொடருவார். இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், கடந்தமுறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்று திமுக எம்பியாக இருந்தார். ஆனால் இம்முறை சொந்த கட்சி சின்னத்தில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா 1,78, 000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 5260 வாக்குகள் நோட்டாவிற்கு பதிவாகியுள்ளது.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மாலை 4மணி நேர நிலவரப்படி, 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில், திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துரை வைகோ – 372733, அதிமுக – கருப்பையா – 153527, அமமுக – செந்தில்நாதன் – 72627, நா.த.க – ராஜேஷ் – 70674, 2,19,206 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 12 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 18847 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 18210 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 8578 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3544 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 12வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 1200 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18வது சுற்று நிறைவடைந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-5,60,527,
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-1,91,243,
பாமக வேட்பாளர் திலகபாமா -91,561, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-80,684 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 3,68000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை.
2024 நாடாளுமன்ற தொகுதியின் தர்மபுரி நாடாளுமன்றத்தின் திமுக வேட்பாளர் மணி 22,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக கட்சி நிர்வாகிகள், தர்மபுரியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்ந்த நிர்வாகிகள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 14-வது சுற்று முடிவு . திமுக கூட்டணி (காங்கிரஸ்) :361449, அதிமுக / கூட்டணி (அதிமுக) :255208, வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 1,06,241 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 15 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 3,95,003 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,45,813 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,01,591 வாக்குகளும், நாதக வேட்பாளர் 75,132 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 2,49,190 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.