Tamilnadu

News June 4, 2024

நாகை நாடாளுமன்ற தொகுதி 17 ஆவது சுற்று நிலவரம்

image

நாகை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்பொழுது 17வது சுற்று முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இதில் சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ் 402542, அதிமுக சுர்ஜித் சங்கர் 223206, நாம் தமிழர் கார்த்திகா 116165, பாஜக ரமேஷ் கோவிந்த் 89864 வாக்குகள் பெற்றுள்ளனர். வாக்குகள் அடிப்படையில் முதலிடத்தில் சிபிஐ, 2வது இடத்தில் அதிமுக, 3வது இடத்தில் நாதக உள்ளது.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர் : டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 20 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 5,28,005 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,92,154 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,37,223 வாக்குகளும், நாதக வேட்பாளர் 98,304 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 3,35,851 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்த மாணிக்கம் தாகூர்

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி வெள்ளைச்சாமியை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.இந்த வாக்கு எண்ணும் மையத்தை இந்திய கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் மாலை பார்வையிட வந்தார். காங்கிரஸ் திமுக கட்சி வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களை சந்தித்து நிலவரங்களை கேட்டறிந்தார். வெற்றி வாய்ப்பை பற்றியும் கேட்டறிந்தார்‌.

News June 4, 2024

காங்கிரஸ் வெற்றி சற்று நேரத்தில் உறுதி செய்யப்பட உள்ளது

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. மொத்தமாக 21 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் 5,10,752 , அதிமுக 2,41,932 , பா.ம.க 1,64,472 , நா.த.க 1,24,560 வாக்குகள் பெற்றுள்ளனர். மொத்தமாக 2,68,820 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகித்து வருகிறார். இன்னும் ஒரு சுற்று மட்டுமே உள்ளது.

News June 4, 2024

பெரம்பலூர்: 17ஆவது சுற்று முடிவு

image

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு , 17ஆவது சுற்று முடிவில்.தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு – 5,15,911, அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரமோகன் – 1,79,931, ஐ.ஜே.கே.(பா.ஜ.க.)வேட்பாளர் பாரிவேந்தர் – 137230 வாக்குகள் பெற்றுள்ளனர். 3,35,980 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண்நேரு 17- வது சுற்றில் முன்னிலையில் உள்ளார்‌.

News June 4, 2024

திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் 16 வது சுற்று விவரம்

image

திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியின் 16 வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக வேட்பாளர் 424537 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 237719 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 122445 வாக்குகளும்,
நாத வேட்பாளர் 63881 வாக்குகளும் பெற்றுள்ளன.
திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை தொடர்ந்து 186818 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.

News June 4, 2024

16 ஆவது சுற்றில் 61,302 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 16 ஆம் சுற்று முடிவில் விசிக – 3,64,537, அதிமுக – 3,03,235, பாமக – 1,41,083, நாம் தமிழர் – 45,124 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 61,302 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

திருவள்ளூர் 20-வது சுற்று முடிவில் வாக்குகள் விபரம்.

image

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் 20-வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசி காந்த் செந்தில் 5,88,695 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 1,66,618 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பாலகணபதி 1,68,121 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஸ் சந்தர் 86,564 வாக்குகளும் பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது.

News June 4, 2024

விருதுநகர் 13வது சுற்று முடிவுகள் வெளியீடு

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 13வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 17850 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 18606 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 9814 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3826 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 13 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 244 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

சிவகங்கையில் தொடரும் பின்னடைவு

image

சிவகங்கை மக்களவை தொகுதியில் 11வது சுற்று முடிவில் கார்த்தி சிதம்பரம் 2,18,694 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் 1,18,655 வாக்குகளும், பாஜக வேட்பாளர் தேவநாதன் 89,976 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி 79,543 வாக்குகள் பெற்றுள்ளார்.இந்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் கடும் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.

error: Content is protected !!