India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. 14 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் 3,94,704 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 1,07,616 வாக்குகள், தமாகா வேட்பாளர் 86,749 வாக்குகள், நாம் தமிழர்வேட்பாளர் 86,608 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் கனிமொழி 2,87,088 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 22வது சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 5,49,041, அதிமுக குமரகுரு – 4,97,008, பாமக தேவதாஸ் – 70,260, நாதக ஜெகதீசன் – 71,806 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் – 52,033 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
18 ஆவது மக்களவைத் தேர்தலில், 22வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் வட சென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 3,28,696 வாக்குகளும், தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் 1,79,571 வாக்குகளும், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் 2,66,645 வாக்குகளும் பெற்று வெற்றியின் விளிம்பில் உள்ளனர். இன்னும் சில மணி நேரங்களில் வெற்றி குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 21ம் சுற்றில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 5,34,936, அதிமுக குமரகுரு – 4,82,469, பாமக தேவதாஸ் – 69,240, நாதக ஜெகதீசன் – 69,912 வாக்குகள் பெற்றனர். இதில் திமுக வேட்பாளர் – 52,467 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நாமக்கல் மக்களவை தொகுதியின் 13 சுற்றில் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 3,03,741 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணி 2,80,687 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். பாஜக வேட்பாளர் ராமலிங்கம் 67928 வாக்குகளும், நாதக கனிமொழி 60,731 வாக்குகள் பெற்றுள்ளன. 13 வது சுற்றில் மாதேஸ்வரன் 23,054 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்..
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 21 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 5,53,188 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,01,948 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,43,609 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,03,011 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 3,51,240 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தேர்தலின்போது, தனது கட்சியை கலைத்த நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைந்ததோடு ஒரு சீட்டையும் பெற்றார். அதன்படி, கிடைத்த விருதுநகர் தொகுதியில் தனது மனைவி ராதிகாவை களமிறக்கினார். அவரை எம்பியாக்கும் கனவோடு தீவிரமாக களமாடினார் சரத்குமார். ஆனால், வாழ்வில் நாம் நினைக்கும் அனைத்தும் உடனே கிடைத்துவிடுவதில்லை. அதற்கு சரத்குமாரும் விதிவிலக்கல்ல! ‘விருதுநகரில் win’ என்ற இலக்கு தற்போது கலையாத கனவானது.
தென்காசி பாராளுமன்ற தொகுதி 16 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 353392, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 188018, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 163229, இசை.மதிவாணன் (நா.த.க) – 102694 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 165374 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஈரோடு மக்களவை தாகுதியில் 5வது சுற்று முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் 1,41,372 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 84,489 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கார்மேகம் 21,467 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்துள்ளார். தமாகா வேட்பாளர் விஜயகுமார் 18,824 வாக்குகள் பெற்றுள்ளார். பிரகாஷ் 56,883 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நவாஸ்கனி முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஓபிஎஸ் இருக்கும் நிலையில் மூன்றாவது இடத்திற்கு நாம்தமிழர்-அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி ஜெயபெருமாள் (அதிமுக) 72183, சந்திரபிரபா ஜெயபால் (நாதக) 71022 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கான ரேஸில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.