India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.இதில் இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்து வெற்றி பெறும் தருவாயில் உள்ளார்.இந்த நிலையில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாமக்கல் அருகே அமைந்துள்ள விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு என்னும் மையத்தில் திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 371142 வாக்கு எண்ணிக்கையிலும் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 3424432 வாக்கு எண்ணிக்கையும் திமுக மற்றும் அதிமுக இடையே 28710 வாக்கு வித்தியாசத்தில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் முன்னணியில் உள்ளார்.
நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, வெற்றியை கொண்டாடும் விதமாக ஈரோடு வடக்கு மாவட்டம் டி.என். பாளையம் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் எம். சிவபாலன் தலைமையில் அண்ணா சிலை, பங்களாபுதூர், கணக்கம்பாளையம் கலைஞர் சிலை, கள்ளிப்பட்டி காந்தி சிலை ஆகிய பகுதிகளில் மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருச்சி மக்களவை தொகுதி தேர்தலில், மதிமுக வேட்பாளர் துரைவைகோ, 3,11,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.மொத்தம்,25 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மொத்தம்,5,38,408 வாக்குகளை துரை வைகோ பெற்று இருக்கிறார்.அதிமுக வேட்பாளர் கருப்பையா 227326 வாக்குகள் பெற்று 2ம் இடம் பெற்றுள்ளார்.நாதக வேட்பாளர் ராஜேஷ் 106676 வாக்குகள் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் 99453 வாக்குகள் பெற்றுள்ளார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதி நிலவரம் 22 வது சுற்றும் முடிவுகள் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இதன்படி,
காங்கிரஸ் 494150
பாஜக 331369
நாம் தமிழர் 85724
அதிமுக 88055
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 162781 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார் இன்னும் ஒரு சுற்று மட்டுமே பாக்கி உள்ளதால் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி விளிம்பில் உள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 20 ஆம் சுற்று முடிவில் விசிக – 4,52,178, அதிமுக – 3,83,740, பாமக – 1,71,903, நாம் தமிழர்: 54,584 வாக்குகள் பெற்றனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 68,438 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
வேலூர் தொகுதியில் 19 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 554, 170 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 343, 994 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 114, 120 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 18 சுற்று முடிவில் 210,176 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 5,37,879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,47,467 வாக்குகளும், பாஜக-தமாகா வேட்பாளர் விஜயசீலன் 1,21,680 வாக்குகளும், நாதக வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன்1,19,286 பெற்று தோல்வியைத் தழுவினர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். தபால் வாக்குகள் மற்றும் 23 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் முரசொலி 5,02,245 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் சிவநேசன் 1,82,662 வாக்குகளும், பாஜக 1,70,613 வாக்குகளும், நாத 1,20,293 வாக்குகள் பெற்றனர்.இதன் மூலம் 3,19,583 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றுள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 26 சுற்றுகள் உள்ள நிலையில், 23 சுற்றுகள் முடிவில் காங்., வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 4,12,392 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் 215173 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்தார். தேவநாதன் 184315 3ஆம் இடம்பிடித்தார். 23வது சுற்று முடிவில் 1,97,219 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.