Tamilnadu

News June 4, 2024

விருதுநகர் 17 ஆவது சுற்று முடிவு வெளியீடு

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 17வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 17511 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 18324 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 9825 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 4227 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 17வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 1991 வாக்குகள் பெற்று முன்னிலை உள்ளனர்.

News June 4, 2024

காஞ்சிபுரம் திமுக வெற்றி

image

காஞ்சிபுரம் (தனித்)தொகுதி (செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்தரமேரூர், காஞ்சிபுரம்)
இரண்டாவது சுற்று நிலவரப்படி திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் திமுக 582978 வாக்குகளும், அதிமுக 362291வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 109858 வாக்குகளும் ,பாமக 163792 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் க.செல்வம் 219937 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

News June 4, 2024

23 வது சுற்றில் 231999 வாக்குகள் வித்தியாசம்

image

திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் 23 வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் 542236,
அதிமுக வேட்பாளர் 310237, பாஜக வேட்பாளர் 154280, நாதக வேட்பாளர் 82807 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் விட திமுக வேட்பாளர் 231999 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார்.

News June 4, 2024

விருதுநகர் 16-வது சுற்று முடிவுகள் வெளியீடு

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 16வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 16541 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 15515 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 6762 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3022 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 16வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4729 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

நெல்லை வாக்கு எண்ணும் மையத்தில் திடீர் மின்தடை

image

நெல்லை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் நெல்லையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இப்போது மாலை நேரத்தில் வாக்கு என்னும் மையம் முழுவதும் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணும் பணியானது தாமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

News June 4, 2024

நெல்லையில் மாறிய வானிலை-மக்கள் எதிர்பார்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் கொளுத்தி வருகின்றது. இந்த நிலையில் இன்று (ஜூன் 4) காலை முதல் வானிலை மந்தமாக காணப்பட்ட நிலையில் இன்று மாலை மழை வருவது போல் மேகமூட்டமாக வானிலை காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

News June 4, 2024

ராமநாதபுரம் எம்பிக்கு நெல்லை நிர்வாகிகள் வாழ்த்து

image

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் சார்பில் 2வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் நவாஸ் கனிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் நயினார் முஹம்மது கடாபி இன்று (ஜூன் 4) சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

News June 4, 2024

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றி முகம்

image

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் தற்போது 1, 30,768 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் சுற்றில் இருந்து தற்போது வரை முன்னணியில் உள்ளார்.
தற்போது 18 வது சுற்று முடிவில் 1,50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

2 முறை மோடி வந்தும் தோல்வியை தழுவும் பாஜக

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி இரண்டு முறை நெல்லை மாவட்டத்திற்கு வந்து பிரச்சாரம் செய்தார். முதலில் நெல்லை மாவட்டத்தில் அறிமுகம் கூட்டம் நடத்தினார். பின்னர் அம்பை அருகே உள்ள வி.கே.புரத்தில் பிரச்சாரம் கூட்டம் நடத்தினார். இதனால் நெல்லை தொகுதி பாஜக வசம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக பின்னடைவில் உள்ளது.

News June 4, 2024

மண்ணை கவ்விய மண்ணின் மைந்தர்கள்

image

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மண்ணின் மைந்தர்களான பிஜேபி நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ராபர்ட் ப்ரூஸ் என்பவர் நிறுத்தப்பட்டார். மண்ணின் மைந்தர்கள் மூன்று பேரையும் தோற்கடித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

error: Content is protected !!