India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் தொகுதியில் 21 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 5,66,276 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 3,50,661 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 1,16, 863 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். 21 ஆம் சுற்று முடிவில் 2,15,615 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஜான் பாண்டியன் இன்று 7 மணி நிலவரப்படி இரண்டு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் 420823, அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 227328, பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 205569, நாதக வேட்பாளர் இசை மதிவாணன் 128049 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 21 aaம் சுற்று முடிவில் விசிக – 4,61,514, அதிமுக -3,91,244, பாமக – 1,75,371, நாம் தமிழர் – 55,602 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 70270 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா 2,71,183 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 24 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இறுதி சுற்று முடிவில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 5,18,459 வாக்குகளும் அதிமுக 2,47,276 வாக்குகளும் பாமக 1,66,271 நாம் தமிழர் கட்சி 1,27,642 வாக்குகளும் பெற்றுள்ளன.
வேலூர் தொகுதியில் 20 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 561, 027 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 347, 803 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 115,785 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 20 ஆம் சுற்று முடிவில் 217,033 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் 3,01,959 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 1,86,154 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் 99,561 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவினர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை துவக்கத்திலிருந்து முன்னணியில் இருந்து வந்த கனிமொழி இறுதியில் 5, 37, 879 வாக்குகள் பெற்று மெகா வெற்றி பெற்றார். மேலும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக, த மா க ,நாம் தமிழர் வேட்பாளர் உட்பட 27 பேர் என அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்துள்ளார்
நாமக்கல் மக்களவை தொகுதியின் 17வது சுற்றின் முடிவில் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 3,92,286 வாக்குகள் பெற்று 27,726 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணி 3,64,560 வாக்குகள் பெற்றும் 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் ராமலிங்கம் 89547 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தை பிடித்தார்.
மக்களவை தோர்தலில் விஜய் வசந்த் இரண்டாவது முறையாக இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 1,80,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து. கன்னியாகுமரி மக்களால் மீண்டும் மக்களவை உறுப்பினராக ஆன விஜய் வசந்த் அவரது தாயார் தமிழ் செல்வியுடன், அகஸ்தீசுவரத்தில் உள்ள தந்தையின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 27 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 6,92,720 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,50,711 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 190521 வாக்குகளும், நாதக வேட்பாளர் 128521 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 4,42,009 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.