India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளராக நவாஸ்கனி ஏணி சின்னத்தில் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மொத்தம் 491052 வாக்குகள் பெற்று 161463 வாக்குகள் வித்தியாசத்தில் நவாஸ் கனி வெற்றி பெற்றார் . ஓபிஎஸ் 329589, ஜெயபெருமாள் அதிமுக 96182, சந்திரகலா ஜெயபால் நாதக 93506 வாக்குகள் பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 25வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-6,67,391, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-2,25,492, பாமக வேட்பாளர் திலகபாமா-1,11,013, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-9,6891 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில், 4,42,000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் எண்ணப்பட்ட தபால் ஓட்டு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. இதன்படி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 2850 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 584 வாக்குகளும், த. மா க வேட்பாளர் 700 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் 920 வாக்குகளும் பெற்றிருந்தனர். தபால் வாக்குகளில் கனிமொழி முன்னணியில் உள்ளார்.
18 ஆவது மக்களவைத் தேர்தலில், சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று தலைநகரை தக்கவைத்துள்ளனர். வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4,72,985 வாக்குகளும், தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் 3,43,294 வாக்குகளும், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் 4,06,292 வாக்குகளும் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,94,608 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தப்படியாக பாஜக வேட்பாளர் பாலகணபதி 2,24,042 வாக்கு பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,550 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பெற்றார். வெற்றி பெற்ற காங் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் வெற்றி சான்றிதழை இன்று இரவு வழங்கினார்.
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,12,534 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 3,99,354, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,12,178 வாக்குகளும், நாதக வேட்பாளர் 62,130 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்று வெற்றியை நழுவ விட்டனர். அண்ணாமலை 1,13,180 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 18 ஆவது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 18833 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 18273 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 8553 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3758 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 18 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2551 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 3,86,114 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 1,58,948 வாக்குகளும், தேமுதிக(அதிமுக) வேட்பாளர் பார்த்தசாரதி 67,728 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 26வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-6,67,744, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-2,25,733, பாமக வேட்பாளர் திலகபாமா-1,11,054, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-96,984 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில், 4,42,011 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 24வது சுற்று நிறைவடைந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-6,66,787,
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-2,25,220,
பாமக வேட்பாளர் திலகபாமா-1,10,956,
நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-96,745 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 4,42,000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை.
Sorry, no posts matched your criteria.