India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரத்தில் நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர், முன்னாள் (இன்னாள்) எம்பி உட்பட 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் நவாஸ்கனி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். ஓபிஎஸ், அதிமுக, நாதக அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிலையில் நோட்டா 6295 வாக்குகள் பெற்று 8வது இடத்தை பிடித்தது. இதனால் போட்டியிட்ட 18 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. இந்த தோ்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தேசிய அளவில் 290-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வந்தது. இதனையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் பாஜகவினா் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட தனக்கு லட்சக்கணக்கான வாக்குகளை அளித்த ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்கள் தீர்ப்பை ஏற்று தோல்வியை கண்டு துவளாமல் தொடர்ந்து பணியாற்றி ஜெயலலிதா வழி ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைக்க அனைவரும் பாடுபட வேண்டும் என முன்னாள் முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் உட்பட 12 பேர் போட்டியிட்டனர். திமுக வெற்றி பெற்ற நிலையில், தேமுதிக வேட்பாளர் சிவநேசனைத் தவிர மீதமுள்ள 10 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். இதில் ஆறு சுயேச்சை வேட்பாளர்களை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்றது. நோட்டாவிற்கு 12,833 வாக்குகள் கிடைத்தன. இதனால் நோட்டா 6வது இடத்தை பிடித்தது.
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகே நேற்று(ஜூன் 4) காலை, தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி இறந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று உடலை கைப்பற்றிய போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்த பாபு ராம்(25) என்பதும், கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் நீர் தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக இன்று (ஜூன் 5) காலை 11 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். பாபநாசம் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை தாமரை நகரைச் சேர்ந்த தபால் துறை அலுவலர் மணிகண்டனின் மகள் எம்.ஜெயதி பூர்வஜா, நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவி ஜெயதி பூர்வஜா 720/720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களும் பூர்வஜாவுக்கு வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சிதம்பரம் மேல வீதி மற்றும் சின்ன மார்க்கெட் அண்ணா காய்கறி மார்க்கெட் பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் பச்சை மிளகாய் கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ₹40 ரூபாய் முதல் ₹60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது கடுமையாக விலை உயர்ந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்று வெற்றி சான்றிதழை பெறுவதற்காக செல்லும் முன் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பின் பேரில் மேயர், துணை மேயர், வாரிய தலைவர், மத்திய மாவட்ட பொறுப்பாளர், ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று (ஜூன் 4) வருகை தந்தனர். ஆனால் இவர்களை மாவட்ட ஆட்சியர் உள்ளே வருவதற்க அனுமதிக்கவில்லை. இதனால் இவர்கள் வெளியே நின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்துகோட்டை பகுதியில் நேற்று(ஜூன் 4) இரவு, பைக் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பைக்கில் பயணம் செய்த கட்டட தொழிலாளர்கள் சுரேந்தர்(24), தயாநிதி(18) ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர். பைக் ஓட்டிச் சென்ற சக்திவேல்(25) படுகாயத்துடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.