India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் மது வகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தை, பழனி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் தலைவர் முத்து விஜயன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் முருகானந்தம், மண்டல தலைவர் வீரமணி ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அனுபவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாளாக கனமழை பெய்துவருகிறது. இந்த மழை விவசாய நிலங்களுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மழை பெய்தது. இந்த மழையால் நகரின் பல இடங்களில் வாகனங்கள் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. குளிரான காலநிலையால் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்குள்ளாயினர். இதே காலநிலை தொடரும்பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
நேற்று காரைக்குடியில் 21வது சுற்று ஓட்டு எண்ணிக்கையின் போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம்.சீக்காயூரணி கிராமத்தில் 28 ஓட்டு மட்டுமே பதிவாதியுள்ளது.இதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததனர். கிராமத்திற்க்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்தலை புறக்கணித்துள்ளது தெரியவந்தது.
பதிவாதியுள்ள 28 ஓட்டில் ஒன்று நோட்டாவுக்கு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 5 லட்சத்து 68 ஆயிரத்து 692 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பசுபதி 1 லட்சத்து 17 ஆயிரத்து 682 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார். இவர் உட்பட வேலூரில் போட்டியிட்ட 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து நேற்று வேலூரில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அளித்த பேட்டியில் திராவிட கொள்கையை அடிப்படையாக கொண்ட கட்சிகளுக்கு தான் இனி தமிழகத்தில் எதிர்காலம் என்பதை இந்த தேர்தல் நிரூபித்திருக்கிறது. இந்த தேர்தல் மூலம் பாஜகவிற்கு மக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர் என்றார்.
பெரம்பலூர் தொகுதியில் தொடக்கத்தில் இருந்தே திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை வகித்த நிலையில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தரை விட அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் பாரிவேந்தர் டெபாசிட்டையும் இழந்துள்ளார். இவர் கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 4 லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், முதல்கட்டமாக 200 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர். இதற்கான கட்டுப்பாட்டு அறை அங்காடி நிா்வாக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, குற்ற செயல்களை தடுக்க முடியும் என அங்காடி நிா்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று(ஜூன் 4)வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாக்குகள் என தொகுதி முழுவதும் 10,074 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் 1,070 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவாகியுள்ளது.
உதகையில் அரசு தாவரவியல் பூங்காவுக்கு அடுத்து அதிக சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக படகு இல்லம் விளங்குகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்கும் மோட்டார் படகுகள், அலங்கார பெடல் படகுகள் மற்று துடுப்பு படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்கின்றனர். அதன்படி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 லட்சத்து 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என்று படகு இல்லம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.