Tamilnadu

News June 5, 2024

நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்

image

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையொட்டி ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், நகர ஒன்றிய பேரூர் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்­வா­கி­களை ராணிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

News June 5, 2024

ஈரோடு: டெபாசிட் இழந்த நாம் தமிழர், த.மா.கா.!

image

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று(ஜூன் 4) நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 5,62,339 வாக்குகளுடன் 2,36,566 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 3,25,773 வாக்குகளுடன் அதிமுகவை சேர்ந்த அசோக்குமார் 2 ஆம் இடம் பிடித்தார். நாம் தமிழர் 82,796 வாக்குகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் 77,911 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தனர்.

News June 5, 2024

திருவள்ளூர்: கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

image

திருத்தணி அருகே சின்னம்மாபேட்டையில் உள்ள மாவு மில்லில் இருந்து சத்தம் அதிகமாக வருவதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் அவதிப்பட்டனர். இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை உள்ளிட்டோர் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் இன்று காலை ஏழுமலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

News June 5, 2024

கடலூர் தொகுதி தேர்தல் முடிவு

image

2024 மக்களவைத் தேர்தல்:
காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்- 4,55,053 வாக்குகள்
தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து- 2,69,157 வாக்குகள்
பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்- 2,05,244 வாக்குகள்
நாதக வேட்பாளர் மணிவாசகன்- 57,424 வாக்குகள்

News June 5, 2024

மயிலாடுதுறை தொகுதி தேர்தல் முடிவு!

image

2024 மக்களவைத் தேர்தல்:
*காங்கிரஸ் வேட்பாளர் சுதா – 5,18,459 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் பாபு – 2,47,276 வாக்குகள்
*பாமக வேட்பாளர் ஸ்டாலின் – 1,66,271 வாக்குகள்
*நாதக வேட்பாளர் பி.காளியம்மாள் – 1,27,642 வாக்குகள்

News June 5, 2024

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அலுவலர்களுக்கு ஆட்சியர் பிரதீப் குமார் மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 5, 2024

பெரம்பலூர் தொகுதி தேர்தல் முடிவு!

image

2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் அருண் நேரு – 6,03,209 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் – 2,14,102 வாக்குகள்
*ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் – 1,61,866 வாக்குகள்
*நாதக வேட்பாளர் இரா.தேன்மொழி – 1,13,092 வாக்குகள்

News June 5, 2024

கரூர் தொகுதி தேர்தல் முடிவு

image

2024 மக்களவைத் தேர்தல்:
*காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி- 5,31,829 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் தங்கவேல்- 3,66,209 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் செந்தில்நாதன்- 1,01,517 வாக்குகள்
*நாதக வேட்பாளர் கருப்பையா- 86,962 வாக்குகள்

News June 5, 2024

திருச்சி தொகுதி தேர்தல் முடிவு!

image

2024 மக்களவைத் தேர்தல்:
*மதிமுக வேட்பாளர் துரைவைகோ- 5,42,213 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் கருப்பையா – 2,29,119 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ராஜேஷ் – 1,07,458 வாக்குகள்
*அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்- 1,00,747 வாக்குகள்

News June 5, 2024

திண்டுக்கல் தொகுதி தேர்தல் முடிவு

image

2024 மக்களவைத் தேர்தல்:
*சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம்- 6,70,149 வாக்குகள்
*எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்- 2,26,328 வாக்குகள்
*பாமக வேட்பாளர் திலகபாமா- 1,12,503 வாக்குகள்
*நாதக வேட்பாளர் கயிலைராஜன்- 97,845 வாக்குகள்

error: Content is protected !!