India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஜனதாபுரம் செட்டியப்பனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் அருண் நேரு போட்டியிட்டு வெற்றி 5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இன்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற எம்பி கனிமொழியிடம் அவரது சென்னை இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்தினை பெற்றார். நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:- ஓமலூர் – 2,094, எடப்பாடி – 1,832, சேலம் (மேற்கு) – 2,619, சேலம் (வடக்கு) – 2,940, சேலம் (தெற்கு) – 3,010, வீரபாண்டி – 2,182, தபால் வாக்குகளில் பதிவு – 217. இதன்படி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 14 ஆயிரத்து 894 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
புதுவை மாணவர்கள், பெற்றோர்கள் நல சங்க தலைவர் வை.பாலா சுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில், தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு முகமையை புதுவை சுகாதாரத்துறை அணுகி புதுவை மாணவர்களின் நீட் தரவரிசை பட்டியலை பெற்று வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு நூற்பு மற்றும் தொழில்நுட்ப ஜவுளித்துறை தொடர்பான பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் முதற்கட்டமாக ஜவுளி துறைக்காக டிஎன் டெக்ஸ்டைல்ஸ் என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சி தேவைப்படுவோர் இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோட்டில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.