India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு நாளை ஜூன்-9ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்காக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 228 தேர்வு மையங்களில் 59 ஆயிரத்து 615 பேர் தேர்வுகள் எழுதவுள்ளனர். அதற்காக 62 நடமாடும் குழுக்கள், 16 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் தயார்நிலை ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு, அவர்கள் தலைமையில் நேற்று (ஜூன் 7) நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் / ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கர்க், ஓசூர் சார் ஆட்சியர் செல்வி. பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, கல்லணையில் 10.4 மி.மீ, திருக்காட்டுப் பள்ளியில் 6.2 மி.மீ, திருவையாறில் 3 மி.மீ, தஞ்சாவூரில் 2மி.மீ, பாபநாசத்தில் 9 மி.மீ, கும்பகோணத்தில் 2.4 மி.மீ, பூதலூரில் 9.6 மி.மீ, வல்லத்தில் 12 மி.மீட்டரும், குருங்குளத்தில் 2 மி.மீட்டரும் இன்று காலை வரை மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு அருகே நெம்மேலி பகுதியை சேர்ந்த யுவராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். யுவராஜ் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த யுவராஜ் இரவு உணவு அருந்திவிட்டு வீட்டு வாசலில் தனது மகனுடன் படுத்து உறங்கி உள்ளார். மர்ம நபர்கள் யுவராஜை வெட்டி படுகொலை செய்தனர்.
தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வருவாய்த்துறைக்கு விண்ணப்பிக்கப்படும் பல்வேறு விண்ணப்பங்களுக்கு 16 நாட்களுக்குள் தீர்வு கிடைத்திடும் வகையில் அதனை கண்காணிக்க தாலுகா வாரியாக 5 அலுவலர்களை நியமித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். மேலும் விண்ணப்பங்களை வரிசை அடிப்படையில் பரிசீலனை செய்து முடிவு செய்யப்படுவதை கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 7.3 செ.மீ மழை திருவள்ளூரில் 3.5 செ.மீ மழை ஊத்துக்கோட்டை 4.2 செ.மீ, தாமரைப்பாக்கம் 1.8 செ.மீ, ஆர்கே பேட்டை 2.2 செ.மீ, செங்குன்றம் 1 செ.மீ, பொன்னேரி 1.4 செ.மீ பள்ளிப்பட்டு 1 செ.மீ, சோழவரம் 2.1செ.மீ, கும்முடிபூண்டி 2செ.மீ, ஆவடி 5மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப் பெட்டியில் நேற்று இரவு பயணம் செய்த மத்திய ரிசர்வ் போலீசார் ஓடும் ரயிலில் மது அருந்திக்கொண்டு ரகளை செய்தனர். பயணிகள் ஜோலார்பேட்டையில் நின்றவுடன் ரகளை ஈடுபட்டவர் இறக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட போலீசார் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கட்கிழமை (ஜூன் 10) முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆரணி, செய்யாறு கோட்டாட்சியா் அலுவலகங்களில் மக்கள் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும். இதேபோல, மனுநீதி நாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்களும் வழக்கம்போல நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தி.மலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட சிவில் சப்ளை சிஐடி போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் கடத்த 5 மாதங்களில் கடத்தப்பட இருந்த 40.990 டன் ரேசன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 109 பேர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 35 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மரண வழக்கை நெல்லை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று(ஜூன் 7) முதல் விசாரணைக்கு துணையாக தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி போலீசார் ஜெயா பிரின்சஸ் தலைமையிலும், குமரி மாவட்ட சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலும் போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.