Tamilnadu

News August 18, 2025

ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்த கலெக்டர்

image

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5-வது நாளாக வினாடிக்கு 6,500 கனஅடியாக நீடிப்பதால், மாவட்ட ஆட்சியர் சதிஸ், நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு மட்டும் தடை விதித்துள்ளார். கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

ராம்நாடு: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

ராம்நாடு இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 18, 2025

குமரியில் ஆக.20 உள்ளூர் விடுமுறை!

image

ஸ்ரீநாராயண குரு பிறந்த தினத்தை முன்னிட்டு 20.08.2025 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம். விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

News August 18, 2025

நெல்லை இளைஞர்களுக்கு வேலை – ஆட்சியர் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நிதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>முழுவிவரங்கள் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் செப்.15 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News August 18, 2025

மதுரை: பெண்களுடன் டி.ஸ்.பி தள்ளு முள்ளு..!

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, உ.மாரிப்பட்டி கிராமத்தில் காவலர்களின் குடும்பத்தினர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கிய நிலையில் அதிகாரிகள் வராததால் வத்தலகுண்டு சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கலைந்து போக சொல்லி டிஸ்பி சந்திரசேகரன் பெண்களிடம் தள்ளுமுள்ளு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News August 18, 2025

கடலூரில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு

image

கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் 0.8 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

News August 18, 2025

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வார்டு எண்.19-ல் நாளை (ஆக.19) “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” சாய் மனோன்மணி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது என கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாத பெண்கள் உரிய ஆவணங்களுடன் இம்முகாமில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News August 18, 2025

திருச்சி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வரும் ஆக.22ம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுலவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுப்பொருட்கள் மற்றும் வேளாண்மை சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

காரைக்கால் புதிய ஆட்சியராக ரவி பிரகாஷ் பொறுப்பேற்பு

image

புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட புதிய ஆட்சியராக ரவி பிரகாஷ் இன்று (ஆக.18) மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்கும் கோப்புகளில் கையெழுத்திட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ரவி பிரகாஷ்-க்கு துணை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News August 18, 2025

BREAKING தூத்துக்குடியில் 17,200 பேருக்கு வேலை வாய்ப்பு

image

தூத்துக்குடியில் மேலும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. அதன்படி அல்லிக்குளம், இராமசாமிபுரம், கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டபாறை, உமரிக்கோட்டை, பேரூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் 1967 ஏக்கரில் ரூ.677 கோடியில் தொழிற்பூங்கா அமைய உள்ளது. இதனால் 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 3 மாதத்திகுள் இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!