Tamilnadu

News June 8, 2024

மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டுப்பாடு

image

மெரினா கடற்கரையில், மக்களை இரவு 10 மணிக்கு மேல் இருக்கக் கூடாது எனக் கூறி காவல் துறையினர் அப்புறப்படுத்துவதாக சமூக ஆர்வலர் ஜலீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சென்னை மாநகர காவல் சட்டம் 41ன் படி பொது இடங்களில் கூடுவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்க அதிகாரம் உள்ளது என காவல்துறை சார்பில் கூறப்பட்டது. இதனால், இனியும் இந்த நேரக் கட்டுப்பாடுகள் தொடரும்.

News June 8, 2024

மாவட்ட வளநபர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

image

மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தியை ஊக்குவிக்க பிரதான் மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட வள நபர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 20 ஆம் தேதிக்குள் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 8, 2024

புகையிலைப் பொருள்கள் விற்ற 22 போ் கைது

image

புதுச்சேரியில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை குறைக்க போலீஸாா் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். முத்தியால்பேட்டை, முதலியாா்பேட்டை, இலாசுப்பேட்டை, வில்லியனூா் கிருமாம்பாக்கம், பாகூா், தவளக்குப்பம் பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அதில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை, பீடி, சிகரெட் போன்றவற்றை கைப்பற்றி, 22 போ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

News June 8, 2024

சிவகங்கை: பத்மபூஷன் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

சிவகங்கை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழா அன்று
இந்திய அரசாங்கத்தால் மேன்மை பொருந்திய பணிகளுக்காக வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு (பத்ம விபுஷன் , பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) தகுதியுடையவர்கள் awards.gov.in மற்றும் padmaawards.gov.in தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஜூன் 8) தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

திருச்செந்தூர்: மீனவர் தவறி விழுந்து பலி

image

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் (49). இவர், இன்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக கடற்கரையில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 8, 2024

மதுராந்தகம்: சார் பதிவாளர் வீட்டில் சோதனை

image

மதுராந்தகம் சார்பதிவாளராக (பொறுப்பு) திலீப்குமார் (40) என்பவர் உள்ளார். கடந்த 6ம் தேதி செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி ரூ1, 50, 000 பணத்தை கைப்பற்றி திலீப்குமார் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று காலை கடலூர் பீச் ரோட்டில் உள்ள திலீப்குமார் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

News June 8, 2024

நாட்றம்பள்ளி: பராமரிப்பு பணி தீவிரம்

image

நாட்றம்பள்ளி அடுத்த நாயனதெரு அரசு பள்ளியில் நாளை குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் ஊராட்சி செயலாளர் நாகராஜ் தலைமையில் ஊராட்சி ஊழியர்கள் தேர்வு அறைகள் மற்றும் பள்ளி கழிவறைகள் சுகாதாரமாக வைத்தல் உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபட்டனர்.

News June 8, 2024

வேலூர்: பழைய பஸ்-பாஸ் உடன் இலவசமாக பயணிக்கலாம்!

image

தமிழ்நாடு முழுவதும் வரும் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, 2024-2025ம் கல்வி ஆண்டுக்கான இலவச பஸ்-பாஸ் சலுகை தொடர்ந்து அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2023-2024ல் வழங்கப் பட்ட பழைய பஸ்-பாஸ் அல்லது பள்ளி அடையாள அட்டையை காண்பித்து பயணித்துக் கொள்ளலாம் என அரசு போக்குவரத்துக் கழக வேலூர் மண்டலம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 8, 2024

திருச்சி:இனி வழக்கம் போல் மனு அளிக்கலாம்.!

image

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து, வரும் 10.6.2024ம் தேதி திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். எனவே பொதுமக்கள் மேயரிடம் தங்களுடைய குறைகளை மனுக்களாக வந்து நேரடியாக வழங்கலாம்.

News June 8, 2024

திண்டுக்கல்: கொத்தமல்லி விலை உயர்வு

image

பழனியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக கொத்தமல்லி இலையின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது .தொடர்ந்து மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி கொத்தமல்லித் அழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் கொத்தமல்லி கிலோ 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மழை தொடர்ந்தால் கொத்தமல்லியின் விலை உயரும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!