India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சின்னசேலம் அருகே உள்ள வி அலம்பலம் கிராமத்தில் இன்று மாலை வேப்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஹிட்டாச்சி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அலம்பலம் பகுதி ஏரியில் அருகில் இன்று வேலை செய்து கொண்டிருக்கும் போது மனைவியிடம் தகராறு ஏற்பட்டதால் மனைவி அடித்து கொன்று புதைத்து விட்டார். மேலும் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து கீழ் குப்பம் காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
திருப்பூர் வஞ்சிபாளையம் ரயில் நிலையம் அருகே இன்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 12 வயது மதிக்கத்தக்க சிறுவனும் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னசேலம் அருகே உள்ள வி அலம்பலம் கிராமத்தில் இன்று மாலை வேப்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஹிட்டாச்சி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அலம்பலம் பகுதி ஏரியில் அருகில் இன்று வேலை செய்து கொண்டிருக்கும் போது மனைவியிடம் தகராறு ஏற்பட்டதால் மனைவி அடித்து கொன்று புதைத்து விட்டார். மேலும் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து கீழ் குப்பம் காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே இரயில்வே டிராக் பணிகள் நடைபெறுவதால் ஜூன் 10 ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை இருதினங்களாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சாலை மூடப்படுகிறது. ஆகையால் பார்வதிபுரம் சானல்களை வழியாக கணியாங்குளம் , ஆலம்பாறை, பொன்ஜெஸ்லி கல்லூரி, அமிர்தா கல்லூரி மற்றும் இறச்சகுளம் செல்பவர்கள் மாற்று பாதைகளை பயன்படுத்தவும் என இரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட காவல் அதிகாரிகள் பங்கேற்ற மெல்லோட்டத்தை எஸ்பி சந்தீஷ் இன்று துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அரங்கு துவங்கிய 3 கிமீ தூர ஓட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வாரம் 3 முறை நடைபெறும் இந்த மெல்லோட்டத்தில் 2 கிமீ தூரத்தை ஓடி நிறைவு செய்யும் காவல் துறையினக்கு மாவட்ட காவல் நிர்வாகம் சார்பில் வெகுமதி வழங்கப்படும் என எஸ்பி சந்தீஷ் தெரிவித்தார்.
திருச்சி அதிமுக மாஜி அமைச்சர் பரஞ்சோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்ற 2024 மக்களவைத்தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையாவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், பெரம்பலூர் வேட்பாளர் சந்திரமோகன் அவர்களுக்கு வாக்களித்த மணச்சநல்லூர், முசிறி, துறையூர் வாக்காள பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் நரேந்திர மோடி அவர்கள் நாளை மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் தனது நல்வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
நீலகிரி, கோத்தகிரி பகுதியை சார்ந்த சிவகாமி எஸ்டேட் நிர்வாக இயக்குனர் மற்றும் சிறந்த சமூக சேவகருமான போ.சிவகுமார் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு உதகை முள்ளிகொரை பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தின் மக்களுக்கு மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்களுடன் இனிப்புடன் கூடிய மதிய விருந்தும் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காலை முதல் கிருஷ்ணகிரி அதன் சுற்று வட்டாரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்திருந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் மேகம் சூழ்ந்து மழை பெய்து தொடங்கியது. அரை மணி நேரம் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுவை முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றிய தன செல்வம் நேரு ஓய்வு பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பினை சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் மோகன் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை கல்வித்துறை துணை இயக்குனர் வெர்பினோ ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.