Tamilnadu

News May 4, 2024

புகழ்பெற்ற வேலூர் கோட்டையின் சிறப்புகள்!

image

வேலூர் கோட்டை விஜயநகரப் பேரரசால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். 133 ஏக்கர் பரப்பளவில் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையச் சுற்றி அமைந்துள்ளது. இது பல மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1806 ஆம் ஆண்டு பிரிட்டிஷாருக்கு எதிராக முதன்முதலில் கிளர்ச்சி இக்கோட்டையிலேயே நடைபெற்றது. இக்கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளிவாசல், அரசு அருங்காட்சியகம் உள்ளது.

News May 4, 2024

விழுப்புரம் வீடூர் அணை பற்றிய தகவல்!

image

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே அமைந்துள்ளது இந்த வீடூர் அணை. 1959 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை மறைந்த முதல்வர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்வணையின் மொத்த நீளம் அகலம் முறையே 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும்.

News May 4, 2024

தூத்துக்குடியின் பெருமைமிகு வைகுண்டநாதர் கோயில்

image

தூத்துக்குடியிலுள்ள வைகுண்டநாதர் பெருமாள் கோயில் 6-9 ஆம் நூற்றாண்டுகளில் ஆழவார்களின், இடைக்கால நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் குறிபிடப்பட்டுள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றான இது நவ திருப்பதி கோயில்களிலும், வைணவத்தில் உள்ள நவகிரக கோயிகளிலும் ஒன்றாகும். 110 அடி ராஜ கோபுரம் கொண்ட இதில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சிற்பங்கள் உள்ளன. பல ஆட்சிகளைக் கண்ட இக்கோயிலில் பல புராணக்கதைகளையும் தாங்கியுள்ளது.

News May 4, 2024

தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியில் கணேசன் என்பவரை இன்று அவரது மூத்த மகன் வினோத்குமார் இரும்பு கம்பியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அன்னவாசல் போலீசார் கிணற்றில் பதுங்கியிருந்த வினோத்குமாரை தீயணைப்புதுறையினர் உதவியுடன் கைது செய்தனர்.

News May 4, 2024

பாரதியார் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

image

பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளில் நடத்தப்பட்டு வரும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் 2024-2025- கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. தகுதியுடைய மாணவர்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பத்தை கல்லூரி இணையத்தளத்தில் 06.05.2024 முதல் 06.06.2024 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் இன்று கூறியுள்ளது.

News May 4, 2024

திருப்பத்தூர்: 768 மாணவர்கள் நீட் தேர்வு

image

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு 768 மாணவர்கள் எழுதுகின்றனர். அவர்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்த நேரத்திற்குள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News May 4, 2024

புகையிலை பொருட்கள் பறிமுதல்

image

வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி திரவுபதி கோயில் முன்பு போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சிவலிங்கபுரத்தை சார்ந்த இசக்கி என்பவர் டூவிலரை நிறுத்தி சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 10 கிலோ புகையிலைப் பொருட்களுடன் டூவிலரை பறிமுதல் செய்த போலீசார் இசக்கியை அதிரடியாக கைது செய்தனர்.

News May 4, 2024

பரமக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள வைகை ஆற்றின் சர்விஸ் சாலையோரம் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பரமக்குடி நகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 4, 2024

சாலையோரம் மூதாட்டியின் சடலம் மீட்பு

image

உசிலம்பட்டி அருகே வலையப்பட்டியில் சாலையோரம் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் கிடந்துள்ளது. இதைக் கண்ட கிராம மக்கள் இன்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த உசிலம்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு அவர் யார்? எவ்வாறு உயிரிழந்தார்? வெயிலின் தாக்கத்தின் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

News May 4, 2024

7 மையங்களில் நாளை நீட் தேர்வு 

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் மே 5 நீட் தேர்வு நடைபெறவுள்ளது. அதன்படி, தாமரை பன்னாட்டு பள்ளியில் 1,608, சாஸ்திர நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 1,104, பிளாசம் பப்ளிக் ஸ்கூல் 480, மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 600, கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியில் 648, கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் 648, பட்டுக்கோட்டை லாரன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் 287 என மொத்தம் 7 மையங்களில் 5,375 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

error: Content is protected !!