Tamilnadu

News June 9, 2024

மதுரையில் 23,160 பேர் “ஆப்சென்ட்”

image

மதுரை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வில் 23, 160 பேர் தேர்வு எழுத வராமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 11 தாலுகாவிற்கு உட்பட்ட 393 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 724 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில், 84,564 பேர் மட்டுமே தேர்வு எழுதிய நிலையில் 23,160 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News June 9, 2024

நாகை: தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் IV தேர்வு இன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றதை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

News June 9, 2024

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News June 9, 2024

மோடியின் பதவியேற்பு விழா நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

image

கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் இன்று மாவட்ட பாஜக சார்பில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட பாரதிய ஜனதா கட்சியினர் முடிவு செய்துள்ளார். மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பது பாஜகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News June 9, 2024

ராம்நாடு மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு எழுதிய 32,863 பேர்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு 146 மையங்களில் 165 அறைகளில் நடைபெற்றது. இதில் 41,445 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 32,863 பேர் மட்டும் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் நகர்வு குழுக்கள் மூலம் காவல்துறை பாதுகாப்புடன் கருவூலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வையிட்ட ஆய்வுசெய்தார்.

News June 9, 2024

வேலூரில் செல்போன் திருடன் கைது

image

ஊசூர் சேர்ந்தவர் மணி (65) கூலித் தொழிலாளி. இவர் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று (ஜூன் 8) நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த ரௌடி ஆசான் (36) அவரை வழிமறித்து சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் 200 ரூபாய் பறித்துக்கொண்டு சென்றார். இது குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்கு பதிவு அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து நேற்று அசனை என்பவரை கைது செய்தனர்.

News June 9, 2024

2 மணி நேரம் மின்வெட்டு: தேர்வர்கள் கடும் அவதி

image

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்காக வேலூர் மாவட்டத்தில் 36,705 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இன்று 13 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் 28,850 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7855 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதில் திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் சுமார் 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் இல்லாமல் கடும் அவதி அடைந்தனர்.

News June 9, 2024

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பேட்டி

image

தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததற்கு மகிழ்ச்சி அடைவதாகவும், தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றும் வகையில் தன்னுடைய பணிகள் சிறப்பாக இருக்கும் மற்றும் தனக்கு வாய்ப்பு அளித்த திமுக தலைவருக்கு நன்றி என தர்மபுரி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் வழக்கறிஞர் மணி தெரிவித்துள்ளார்.

News June 9, 2024

வரத்து அதிகரிப்பால் தர்பூசணி விலை குறைவு

image

கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்புகளை தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது தர்பூசணி. இதனால் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை ஈடு செய்வதற்காக அதிக அளவில் மக்கள் வாங்கி சென்றனர். கடந்த காலங்களில் 1 கிலோ தர்பூசணி பழம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்து 1 கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

News June 9, 2024

ஜூன் 12 ஆம் தேதி கடைசி நாள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய ஜூன் 12 ஆம் தேதி கடைசி நாள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. திருத்தம் தேவைப்படும் மாணவர்கள் தற்போதைய மதிப்பெண் சான்றிதழ் நகலில் கையெழுத்திட்டு தலைமையாசிரியர் மூலமாக மாவட்ட தேர்வு அலுவலகத்தில் ஜூன்.12 க்குள் ஒப்படைக்க வேண்டும்.

error: Content is protected !!