India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழிப்பறி, திருட்டு, கடத்தல் பாலியல் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் 7ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கி வைத்திருந்ததாக ரவுடி ஜேக்கப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக சார்பில் ‘காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற நவீன கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது அமைச்சர் சேகர்பாபு, நீலகிரி எம்பி ஆ.ராசா, கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருத்தணியில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு சொந்த ஊரான ஒசூருக்கு இன்று வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதாமல் இருக்க வேனை ஓட்டுநர் திருப்பியபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு அடுத்த சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் மின்பாதைகளில் நாளை பாராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் ஈரோடு சி.எஸ்.நகர், தண்ணீர்பந்தல் பாளையம், ஈ.பி.பி.நகர், மாமரத்துப்பாளையம், செந்தமிழ்நகர், எல்லப்பாளையம், பெரியசேமூர், சின்னசேமூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நேற்று லாரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆனா நிலையில், புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து குமரி மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனம் (இ.கா.ப) அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீட்’ சார்ந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கடந்த ஆண்டு கட்-ஆப் மதிப் பெண்கள் சென்டாக் இணையதளத்தில் உள்ளன. கலந்தாய்வு குறித்த அட்டவணையின் முழு விவரங்கள் அடங்கிய தகவல் கையேடு அரசு ஒப்புதல் அளித்த பின்னர் சென்டாக் இணையதளத்தில் மாணவர்களுக்கான அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மூன்றாவது முறையாக பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்கவுள்ளார். விழாவில் பங்கேற்க புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், பதவி ஏற்கும் விழாவை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த
குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் 228 தேர்வு மையங்களில் 59,615 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்களில் 47,149 நபர்கள் தேர்வு எழுதினர். 12,466 நபர்கள் தேர்வு எழுதவில்லை. 79.08 சதவீத நபர்கள் தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடதக்கது.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பாரத் கேட்டரிங் கல்லூரியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உடன் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.