Tamilnadu

News June 10, 2024

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

image

ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இன்று (ஜூன்.10) பி.எஸ்சி., கணிதம் இயற்பியல் பாடப் பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஜூன் 12 இல் பி.ஏ., வணிகவியல் – கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தொழில் சார்ந்த பாடப்பிரிவு படித்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது என கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புதிய வங்கி கணக்கு

image

பவானி அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு புதிய வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஈரோடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் புதிய கணக்கு எண் வழங்கும் நிகழ்ச்சியை பவானி நகர்மன்ற தலைவர் சிந்துரி இளங்கோ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

News June 10, 2024

சாலையில் தேங்கும் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

image

திருப்போரூர் – தாம்பரம், கொளத்துார்-  மேடவாக்கம், புங்கேரி – தாம்பரம், கோவளம் – தாம்பரம், மாமல்லபுரம்-  தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன.
பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் வடிகால்வாய் வசதி இல்லாததால் மழை நேரத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் சாலையில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

News June 10, 2024

ஆயுத பூஜைக்கான முன்பதிவுகள் நாளை தொடக்கம்

image

தமிழகத்தில் இந்த ஆண்டு ஆயுதபூஜை 11, விஜயதசமி 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டங்களில் உள்ள ரயில்வே நிலையத்தில் அக் 9ம் தேதி செல்பவர்கள் நாளை 11 தேதி முன் பதிவுகளை மேற்கொள்ளலாம். அக் பத்தாம் தேதி செல்பவர்கள் 12ஆம் தேதி முன்பதிவு மேற்கொள்ளலாம். அக் 11ஆம் தேதி செல்பவர்கள் 13ஆம் தேதி அன்று முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் என நேற்று தெரிவிக்கப்பட்டது.

News June 10, 2024

விக்கிரவாண்டிக்கு ஜூலை 10இல் இடைத்தேர்தல்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவையடுத்து அந்த சட்டமன்றத் தொகுதி காலியானது. இந்நிலையில் இந்தத் தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல், கடைசி நாள் ஜூன் 21. ஜூலை 10ல் வாக்குப்பதிவு, ஜூலை 13இல் வாக்குகள் எண்ணப்படும். இன்று முதல் தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்தன.

News June 10, 2024

ஆதார் சிறப்பு முகாமை துவக்கி வைத்த கலெக்டர்

image

இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூரில் உள்ள R.M.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப்‌ பள்ளியில் தமிழக அரசின் அரசுப் பள்ளியிலேயே  ஆதார் சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஐஏஎஸ் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

News June 10, 2024

நீலகிரியில் 37 மையங்களில் தேர்வு

image

நீலகிரி மாவட்டத்தில் TNPSC தேர்வானது ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் 37 மையங்களில் நடந்தது. இத்தேர்வுக்காக, 9,956 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. தேர்வை கண்காணிக்க, 6 நடமாடும் கண்காணிப்பு குழு, 12 பறக்கும் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 37 கண்காணிப்பு கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 7,031 பேர் தேர்வு எழுதினர் 2,925 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

News June 10, 2024

பள்ளிக்குச் செல்லாமல் மாணவர்கள் போராட்டம்

image

திண்டுக்கல் ஒன்றியம் குரும்பபட்டி ஊராட்சி, மீனாட்சிநாயக்கன்பட்டி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளி சென்று வர காலை, மாலை இருவேளைகளிலும் பேருந்து இயக்க கோரி பெற்றோர்களுடன் இணைந்து இந்திய மாணவர் சங்கம் தலைமையில் பள்ளி துவங்கும் முதல் நாளான இன்று பள்ளிக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News June 10, 2024

மாணவ ஆதார் மையம் திறப்பு

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிள்ளையார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சாமிநாத மேல்நிலைப் பள்ளியில் இன்று(ஜூன் 10)காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கான ஆதார் மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

விவசாயிகள் வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைக்க அறிவுறுத்தல்

image

தி.மலை மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதியுதவியை தொடா்ந்து பெற ஜூன் 15 ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைத்தும், இ-கே. ஒய். சி செய்து முடித்தும் பயன்பெறலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஹரிகுமார் தெரிவித்துள்ளாா். 1 399 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தமான ஆவணங்களை இணைக்காமல் உள்ளனா். இவா்கள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்களை அணுகலாம்.

error: Content is protected !!