Tamilnadu

News May 5, 2024

திருமூர்த்தி அணை பிரதான கால்வாய் ஷட்டரில் நீர் கசிவு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் தற்சமயம் வெகுவாக குறைந்து வருகின்றது. இந்த நிலையில் பிரதான கால்வாயில் ஷட்டர் பழுதானதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டு உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஷட்டரை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தற்சமயம் திருமூர்த்தி அணை 60 அடியில் 15 அடி நீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 5, 2024

ரயிலில் தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

image

நெல்லை ரயில் நிலையத்தில்
தவறவிட்ட நகையை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர். நேற்று (மே.4) காலை நெல்லைக்கு வந்த கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஒருவர் தவறுதலாக அருகில் இருந்த பையை சேர்த்து எடுத்துச் சென்றார். பின் அதனை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நாகர்கோவிலை சார்ந்த சசிரேகாவின் பை என தெரிந்ததால் அதில் இருந்த 15 பவுன் நகையுடன் பையை போலீசார் சசிரேகாவிடம் வழங்கினர்.

News May 5, 2024

 ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன்கோவில் கொடை விழா ஆரம்பம்

image

குமாரபுரம், பூவங்காபறம்பு , ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் சித்திரை பொங்காலை திருவிழா மற்றும் கொடை விழா நேற்று தொடங்கியது. சிவதாணுபிள்ளை மணிகண்டன், நாககுமார், சுரேஷ் முன்னிலையில் குமரி மாவட்ட கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். இந்த திருவிழா வரும் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 5, 2024

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் – கணக்கெடுப்பு துவக்கம்

image

கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பிதற்காக மத்திய அரசால் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022 ல் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும் பணி மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது. அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு தொடங்கியது.

News May 5, 2024

சூரை காற்றுடன் வெளுத்து வாங்கிய கன மழை 

image

பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஏரியூர் ஒன்றியம் நாகமரை ஊராட்சியில் கடந்த சில நாட்களாக  வெப்ப அலை வீசியது. இந்நிலையில் நேற்று (4.5.2024) ஒட்டனூர், ஏமனூர், தொதியன், கொட்டாய் கருங்காலி மேடு, நெருப்பூர், காட்டூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் அப்ப பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

News May 5, 2024

தலையாரியூர் கும்பாபிஷேக விழா

image

ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி ஊராட்சி தலையாரியூர் பகுதியில் ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி கோவில் உள்ளது இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி கேசவ பெருமாள் கோவில் இருந்து யானை குதிரை பசுக்களுடன் பக்தர்கள் தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

News May 5, 2024

நாகை: திருப்பூண்டியில் கபடி போட்டி

image

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் நேற்று இளைஞர்களுக்கான 20ம் ஆண்டு தொடர் கபடி போட்டி நடைபெற்றது .இந்நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன். அவர்கள் போட்டியை தொடங்கி வைத்து முதல் பரிசினை வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி, ஞானசேகரன். வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர், மரிய சார்லஸ், கவுன்சிலர் இளம்பரிதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

News May 5, 2024

“வேலூர் 8 வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல்”

image

வேலூர் மாவட்டத்தில் வேலூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று பாஜக வேட்பாளரும், புதிய நீதிக்கட்சியின் நிறுவனா் தலைவருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். வேலூரில் நேற்று செய்தியாளா்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

News May 5, 2024

மாநகர காவல் துறையினருக்கு மன அழுத்த விழிப்புணர்வு

image

காவல்துறை ஆளிநர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க ஏற்படுத்த பட்ட ‘மகிழ்ச்சி ‘ திட்டத்தின் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மதுரை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர காவல் துறை தலைவர் லோகநாதன் தலைமை வகிக்க, போக்குவரத்து துணை ஆணையர் குமார், மனநல மருத்துவர் Dr. ராமசுப்ரமணியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News May 5, 2024

மூன்று மாதங்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது

image

ஈரோடு மாநகராட்சியில் ஊராட்சி கோட்டக்கூட்டுக் குடிநீர் திட்டம் எடுக்கும் இடமான வரதநல்லூர் பகுதியில் போதிய அளவு குடிநீர் உள்ளது .குடிநீர் தேக்கத்தில் தினமும் ஒரு கோடி லிட்டர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. தினமும் மாநகராட்சி மூலம் 80 லட்சம் லிட்டர் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மூன்று மாதங்களுக்கு தேவையான குடிநீர் இருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .

error: Content is protected !!