Tamilnadu

News May 5, 2024

கடலூரில் தொடர்ந்து 4வது நாளாக சதம் அடித்த வெயில்

image

கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடந்த 4 நாட்களாக மிகவும் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று (மே 4ம் தேதி) கடலூரில் 101.5 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக கடலூரில் வெயில் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடும் வெயிலால் கடலூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.மேலும் இன்றும் இதே நிலைதான் தொடரும் என் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 5, 2024

நெல்லை: வாலிபருக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை, ராமையன்பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் மதன் (30). அதே பகுதியைச் சேர்ந்த  தீபன் (27). முன் விரோதம் காரணமாக நேற்று மதனின் வீட்டிற்கு சென்ற தீபன் மற்றும் அவரது நண்பர் முகேஷ் (28) இருவரும் தகராறில் ஈடுபட்டு மதனை அரிவளால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மதன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

News May 5, 2024

தர்மபுரியில் இலவச கால் பந்து பயிற்சி முகாம்

image

தர்மபுரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது. காலை 6-8, மாலை 4-6மணி வரையும் இரண்டு கட்டமாக பயிற்சி நடைபெறும். இதில், 10 முதல் 15 வயது உள்ள பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமை மாவட்ட கால் பந்து கழகத் தலைவர் ஆனந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

News May 5, 2024

10-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்

image

விழுப்புரம், கண்டாச்சிபுரம் பகுதியில் நேற்று 15 வயதுடைய சிறுமிக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொளப்பாக்கத்தைச் சேர்ந்த ஐயப்பன் (28) என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணகி மற்றும் மகளிர் காவல் துறையினர் மணமகன் ஐயப்பன் உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News May 5, 2024

பொது மக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைச்சல்

image

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கும் வகையில் அரக்கோணம் நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைச்சல் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதார அலுவலர் மோகன் தலைமை வகித்தார். இதில் பலர் உடன் இருந்தனர்.

News May 5, 2024

தஞ்சாவூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

2024ஆண்டுக்கான விளையாட்டு விடுதிமையம்,  முதன்மைவிளையாட்டு மையம், சிறப்புநிலை விளையாட்டு மையத்தில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.விளையாட்டு விடுதிக்கு 26.04.2024-08.05.2024 வரையும் சிறப்புநிலை விடுதிக்கு 26.04.2024 -05.05.2024, முதன்மைநிலை விளையாட்டு விடுதிக்கு 26.04.2024-06.05.2024 வரை www.sdat.gov.it இணையவழியில் மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு

News May 5, 2024

திருச்சி மக்களே உஷார்! வரலாறு காணாத வெயில்

image

திருச்சியில் அடுத்த பத்து நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வெயிலின் அளவு 110 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு இருக்கும் என்றும் இதனால் அனல் காற்று வீச கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், நீர் ஆகாரங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 5, 2024

விருதுநகர்:கடந்த ஓராண்டில் மட்டும் நீர்நிலைகளில் 70 பேர் பலி!

image

கடந்த 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் 31 வரை ஓராண்டில் மட்டும் கிணறு, கண்மாய்கள், தெப்பம் என நீர் நிலைகளில் குளிக்கச் சென்று தடுமாறி தவறி விழுந்து என பல வகைகளில் 70 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 60 சதவீதத்திற்கும் மேல் பள்ளி கல்லூரி மாணவர்களை உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்ட நிலையில் நீர்நிலை விபத்துக்களை தடுப்பது அவசியமாகியுள்ளது.

News May 5, 2024

கோயில் மாடுகளை பெற மறுப்பு

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சுற்றித்திரியும் கோயில் மாடுகளை பிடிக்க மதுரை கோயில் நிர்வாகம், தன்னார்வ அமைப்பினர் மறுத்து விட்டதால் சிக்கல் உருவாகி உள்ளது. திருப்புவனத்தில் நாளுக்கு நாள் கோயில் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவற்றை அப்புறப்படுத்துவதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

News May 5, 2024

தேனி அருகே ஒருவர் வெட்டிக் கொலை

image

உத்தமபாளையம் அருகே வரதராஜபுரத்தை சோ்ந்தவா் சந்திரவேல்முருகன். இவரை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த நிஷாந்த் என்பவரிடம் நேற்று (மே.4) விசாரணை நடத்தினா். இதில் சந்திரவேல்முருகனை அவர் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!