India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மழை வாய்ப்புள்ளதால் கத்திரி வெயில் தாக்கம் பெரிய அளவில் இருக்காதுஎன்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் சத்யமூர்த்தி இன்று தெரிவித்தார்.
இன்று (மே.05) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மேட்டூர் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்துள்ளனர். கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் பூங்கா மற்றும் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று, நாளை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி மே.7 அன்று ஈரோடு மாவட்டத்திற்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பக்தர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். காலை முதலே கடலில் குளிக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர்கள் விஜி மற்றும் சுந்தர்,மீனவர்கள். இவர்களுக்குள் மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.நேற்று முன்தினம் விஜி மற்றும் 3 பேர் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த சுந்தர்,கபில் உள்ளிட்ட சிலர் விஜியிடம் தகராறு செய்தனர்.இதைடுத்து அவர்கள் தாக்கினர். புகாரின் பேரில் போலீசார் சுந்தர்,கபிலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
திண்டுக்கல் – கொடைக்கானல் சாலையில் இன்று தருமத்துப்பட்டியில் இருந்து திண்டுக்கல் வந்த தனியார் பேருந்தும், மதுரையில் இருந்து பழனி சென்ற காரும் விபத்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் கூறுகையில் இப்பகுதியில் அதிக வாகனங்கள் செல்லும் நிலையில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக தெரிவித்தனர்.
செங்கம் மேல் வணக்கம்பாடி பகுதியில் உள்ள சிவன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மின்விளக்குகள் மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த ஐயப்பன் (21) மற்றும் மற்றொரு ஐயப்பன் (18) ஆகிய இருவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி செம்பியநல்லூர் ஊராட்சி ஸ்ரீ ராம் நகர் வ உ சி வீதியை சேர்ந்தவர் கார்த்திக், மனைவி வித்யா. இவர்களுக்கு மகன் அகில்(3). இவர்கள் மூவரும் நேற்று தங்கள் வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று எதிர்பாராத நேரத்தில் சிறுவன் அகில் கண்ணத்தில் கடித்து சென்றது. உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவிலின் சித்திரை பெருந்திருவிழா வருகின்ற 07.05.2024 முதல் 14.05.2024 வரை ஒரு வார காலம் நடைபெற உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் அரசு பேருந்துகள் வீரபாண்டிக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை இன்று (மே 5) மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, “இறந்து போன ஜெயக்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மரண வாக்குமூலம் கடிதம் அளித்ததாக கூறி சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது” என தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.