India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா முள்ளுவாடி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன்(45). இவர் நேற்று(மே 5) இரவு கலவை கூட்ரோட்டில் இருந்து முள்ளுவாடி ஏரிக்கரை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கலவை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சூரிய பகவான் தன் கோர தாண்டவத்தை காட்டினார். இந்நிலையில் இதனை சற்றே தணிக்கும் விதமாக வருண பகவான் கருணையால் நேற்று(மே 5) இரவு 11.30 மணி அளவில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. காஞ்சி மாநகரமே இந்த மழையால் குளிர்ச்சி அடைந்துள்ளது. திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தருமபுரி அருகே உள்ள சோகத்தூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை(மே 7) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் எம்.ஜி.ஆர்.நகர், ஏஎஸ்டிசி நகர், நந்தி நகர், பென்னாகரம் மெயின் ரோடு, சத்யா நகர், ஜெ.ஜெ.நகர், வள்ளி நகர், மாந்தோப்பு, வி.ஜெட்டிஅள்ளி, பிடமனேரி, ஏ.ஆர்.கோட்ரஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை அருகே சந்தனபொடி என்ற இடத்தின் அருகே உள்ள விவசாய நிலத்தில் நேற்று(மே 5), மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. பன்றிக்காக வைத்திருந்த மின் வேலியை கடக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே பலியானது. இது குறித்து தேன்கனிகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (மே.7) திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (மே.7) ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக குவாரிகளின் நடைபெற்ற ஆய்வில் 5 பாறைகளில் உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் செயல்படும் குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.சட்ட விதிகளை மீறி செயல்படும் வாரிசு குத்தகைதாரர்களின் மீது தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்
அவினாசி ஒன்றியம் தெக்கலூரை சேர்ந்தவர் கந்தசாமி (58). இவர் தெக்கலூரில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.இந்த நிலையில் இவர் நேற்று மாலை காரில் அவினாசி சென்று விட்டு தெக்கலூர் திரும்பினார்.அவினாசி ஆட்டையாம்பாளையம் அருகே கார் சென்ற போது அப்பகுதியில் இருந்த வேகத்தடையின் மீது ஏறியது.அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் மோதியதில் உயரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு, வெயிலின் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் வெயிலின் தாக்கத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.