Tamilnadu

News June 13, 2024

வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சோதனை

image

வரும் 15 ஆம் தேதி மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றி உட்பட முப்பெரும் விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவிற்கான மேடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை அமைச்சர் முத்துசாமி அருகில் இருந்து துரிதப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயின் உதவியுடன் அப்பகுதியை முழுவதுமாக சோதனையிட்டு வருகின்றனர்.

News June 13, 2024

ஈரோடு: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 21 ஆம் தேதி, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய எண்ணை 86754 12356, 94990 55942 அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

திருப்பத்தூர் தங்கள் கோரிக்கைகளை மனு அளிக்கும் நிகழ்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவுக்கு ஆறு உள்வட்டங்கள் உள்ளது. தினமும் ஒவ்வொரு உள்வட்டத்தில் உட்பட்ட வருவாய்கிராம பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகை தந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக அளிக்கலாம். அதன்படி இன்று(ஜூன் 13)  திருப்பத்தூர் உள் வட்டத்துக்கு உட்பட்ட வருவாய் கிராம பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவாக கொடுத்து தீர்வு காணலாம்.

News June 13, 2024

குளித்தலை அருகே சிறுவன் போக்சோவில் கைது

image

குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுவனும், 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இதில் 2 பேருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பமானார். அதிக வயிற்று வலியும், ரத்தப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீசில் சிறுவன் மீது வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.

News June 13, 2024

எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர், மாவட்டக் அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம் எல் ஏ மாவட்ட எல்லையில் மலர் கொத்து வழங்கி வரவேற்றார். நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

News June 13, 2024

தி.மலை: பொதுமக்கள் குறைதீா் முகாம்

image

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களைப் பெற்று விசாரித்தாா் .

News June 13, 2024

நாமக்கல்: முட்டை விலை 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.138-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News June 13, 2024

கடலூர் மாவட்ட வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவானது.இந்த நிலையில் நேற்று கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News June 13, 2024

திருக்கோவிலூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைத்தேர்தலில் பயன்படுத்துவதற்காக 575 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருக்கோவிலூரில் இருந்து விக்கிரவாண்டிக்கு இன்று அனுப்பி வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 2 லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News June 13, 2024

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கண்காணிப்பில் இருந்து வருகிறது.

error: Content is protected !!