India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூன்.13) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகின்றது. அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று (ஜூன்.13) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 18ம் தேதி கோவையில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சுற்றுலா ரயில் இயக்கபடவுள்ளது . இந்த ரயில் காசி விசாலாட்சி ஆலயம், ராமர் கோவில் உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலாவாக சென்று வர உள்ளது. தங்குமிடம், போக்குவரத்து உணவு சேர்த்து கட்டணம், 41,150 ரூபாய் விருப்பமுள்ளவர்கள் ரயில்வே நிர்வாகத்தை அனுகலாம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூருக்கு இன்று வருகைதந்த கடலூர் எம்பி விஷ்ணு பிரசாத் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், விசிக மாவட்ட செயலாளர் செந்தில், நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் சந்திரசேகர், சிபிஎம் நகர செயலாளர் உட்பட பலர் இருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.இதனைத் தொடர்ந்து இன்று அவர் கடலூர் மாநகரத்திற்கு வருகை புரிந்தார்.பின்பு அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்பு திமுக கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு நன்றி கூறினார்.
மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. மீன் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அரசால் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் நாளை முதல் படகுகள் மீண்டும் மீன்பிடிக்க தயாராகி வருகின்றன. இதற்காக வலைகளை படகில் மீனவர்கள் ஏற்றினர்.பின்பு படகில் ஐஸ் கட்டி ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மடத்துக்குளம் தாலுகாவில் சங்கராமநல்லூர் ருத்ராபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகின்ற ஜூன் 15-ம் தேதி ரேசன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறுகிறது. முகாமில் ரேஷன் கார்டுகள் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூன் 13) கே.வி.குப்பம் லத்தேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.