Tamilnadu

News May 6, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக தமிழகத்தில் உள்ள சில இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

நாமக்கல் அரசு பள்ளி மாணவி சாதனை

image

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த செ.கோபிகா பிளஸ் தேர்வில் 569 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி மற்றும் ஆசிரியைகள் பாராட்டி சால்வை அணிவித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவி பொறியியல் படிப்பில் பயில ஆர்வம் தெரிவித்துள்ளார்.

News May 6, 2024

தென்காசி மாவட்ட அளவில் முதலிடம்..!

image

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் பத்ரி நாராயணன் 592 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்தப் பள்ளியில் தேர்வு எழுதிய 131 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி என்ற இலக்கை எட்டியுள்ளனர்.

News May 6, 2024

திருச்சியில் 82 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விபரங்களை இன்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், அரசு பள்ளிகள் 14, அரசு உதவி பெறும் பள்ளிகள் 6, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 14, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 1, மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் 47 என மொத்தம் 82 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது.

News May 6, 2024

கடலூரில் 71 பள்ளிகள் சாதனை!

image

தமிழ்நாடு முழுவதும் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 246 பள்ளிகளில் 26 ஆயிரத்து 911 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்டத்தில் 71 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இதில் அரசு பள்ளிகள் 12, அரசு உதவி பெறும் பள்ளிகள் 2, மற்றும் தனியார் பள்ளிகள் 57 என மொத்தம் 71 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

News May 6, 2024

வங்கி ஊழியரிடம் வழிப்பறி – 3 பேர் கைது

image

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரத்தைச் சேர்ந்த மனோவா (28). இவர் தனியார் வங்கியில் சுய உதவிக்குழு கடனை வசூல் செய்யும் பணி செய்து வருகிறார். இவர் நேற்று நெய்விளை அருகே பைக்கில் சென்றபோது 3 பேர் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 கிராம் தங்கச் செயின் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மூவரை கைது செய்தனர்.

News May 6, 2024

தி.மலை: +2 தேர்வில் 99.2% தேர்ச்சி

image

தி.மலை +2 தேர்வில் 249 பழங்குடியின மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தி.மலை மாவட்டத்தில் உள்ள ஏகலைவா பள்ளி மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 251 மாணவ மாணவிகள் எழுதினர். அதில் 249 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். இந்த தேர்ச்சி 99.2% என்பது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

வெள்ளி பதக்கம் வென்ற மாணவிகள் சாதனை

image

மேகாலயாவில் தேசிய அளவில் நடந்த சீனியர் பெண்கள் ரோல் பால் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி, ராஜன் ரோல் பால் உள்விளையாட்டு அரங்க மாணவிகள் தமிழ்நாடு அணியில் கலந்து கொண்டனர். இதில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இவர்களை மாஸ்டர் பிரேம்நாத் உள்ளிட்ட விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News May 6, 2024

+2 தேர்வில் சத்தியமங்கலம் பள்ளி அசத்தல்

image

நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. இப்பள்ளியில் தேர்வெழுதிய 197 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஊர்ப் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

error: Content is protected !!