India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில், கனரக லாரிகள் மூலம் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இதனால் பல்வேறு விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது எனவும், எனவே தமிழக அரசும், தென்காசி மாவட்ட ஆட்சியரும் கனிம வள கொள்ளையை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்த வாகனம் கழிவுநீக்கம் செய்யப்பட்டு வரும் 21ஆம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் தருமபுரி மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் பொதுஏலம் விடப்படுகிறது. எனவே ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்வைப்புத் தொகை வங்கி வரைவு செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. அதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 40 பணியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக துறைமுகத்தில் நிகழ்நேர செயல்விளக்கம், எண்ணெய் கசிவை எதிர்க்கும் கருவிகள் மற்றும் நுட்பங்களை காட்சிப்படுத்தியது.
கோவைக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை நேற்று (ஜூன் 13) முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வடசேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இன்று காலை 9: 00 மணி முதல் மாலை 5 மணி வரை வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தனிக்கோட்டை , கருப்பூர் ,புலவஞ்சி , கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, நெம்மேலி, வளையக்காடு ,மகா தேவபுரம் , கண்ணுக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், நாரலப்பள்ளி ஊராட்சி, மகராஜகடை கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, இன்னுயிா் காப்போம், இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட பல புகைப்படங்கள் இருந்தன. இதை நேற்று பொதுமக்கள் பார்வையிட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் 15.06.2024-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நாமக்கல், இராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வருகின்ற ஜூன் 19 காலை 9 மணி முதல் ஜூன் 20 காலை 9 மணி வரை தரங்கம்பாடி வட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்ய உள்ளனர். எனவே இன்று முதல் பொதுமக்கள் கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் மனுவை வழங்கி பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
திருத்தணி புச்சிரெட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் சியாம் சுந்தர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, இவரை இவருடைய நண்பர்கள் ஜோதி நகர் சஞ்சய் குமார், விக்ரம், ஜெயக்குமார், லோகேஷ், 17 வயது சிறுவன் ஆகியோர் தாக்கினர். மேலும் நாட்டு வெடிகுண்டு போட்டு கொன்றுவிடுவோம் என மிரட்டியதாக கொடுத்த புகாரின்பேரில் 4 பேர் கைதுசெய்யப்பட்டு லோகேஷை போலீசார் வலைவீசி தேடுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 213 கிராம சாலைகள் மேம்படுத்தும் பணிக்காக எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 181 சாலைகள் மேம்படுத்தும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. 32 சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் 9 சாலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Sorry, no posts matched your criteria.