Tamilnadu

News June 14, 2024

மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு

image

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை , தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர், பின்னர் ” இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விதமான வேளாண் விளைபொருள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 14, 2024

அடிப்படை தேவையை நிறைவேற்றுவேன்- விளவங்கோடு MLA

image

விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகை கத்பட் நேற்று(ஜூன் 13) பொதுமக்களின் அடிப்படை தேவையான ரோடு, மின்விளக்கு, குடிநீர், போக்குவரத்து விரைவில் நிவர்த்தி செய்ய அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல் பணியாக தேனீ வளர்ப்போர் பிரச்னையை தீர்க்க கூட்டுறவு சங்க அலுவலகத்தை பார்வையிட உள்ளேன். செண்பகதரிசில் ரோடு போட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்வேன்” என்றும் தெரிவித்தார்.

News June 14, 2024

நெல்லையப்பர் திருவிழா; எம்.பி.க்கு அழைப்பு

image

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் திருவிழாவுக்கு, நெல்லை பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழாவின் 8ஆம் திருநாள் மண்டகப்படி விழாவுக்கு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸுக்கு நேற்று நெல்லை மாவட்ட நாடார் சங்கம் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. வரும் 21ஆம் தேதி, தேரோட்டம் நடைபெற உள்ளது.

News June 14, 2024

விழுப்புரம் பாஜக ஆலோசனை கூட்டம்

image

விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பாஜக மாவட்ட பொருளாளர் குமாரசாமி இல்லத்தில், விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் தலைமையில் நேற்று (ஜூன் 13) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் ஆற்றவுள்ள பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 14, 2024

திமுக நிர்வாகி இல்ல விழாவில் மு.க.அழகிரி

image

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று திமுகவின் நிர்வாகியும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மணி செல்வம் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக மு.க.அழகிரிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News June 14, 2024

வேலூர்: பெண்ணிடம் நகை திருடியவர் கைது

image

காட்பாடி எல்.ஜி.புதூர் சாலை கெங்கையம்மன் தெருவை சேர்ந்தவர் புஷ்பா. இவர் காட்பாடி-குடியாத்தம் சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தபோது இவரிடம் மர்ம ஆசாமி ஒருவர் பேச்சு கொடுத்து அவர் பையில் வைத்திருந்த 5 பவுன் நகையைத் திருடிச் சென்றுவிட்டார். இது குறித்த புகாரினபேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விழுந்தாகால் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை நேற்று கைதுசெய்தனர்.

News June 14, 2024

திருப்பூர்: கூட்டணி கட்சிகளுக்கு எம்பி நன்றி

image

உடுமலை அருகே தேவனூர் புதூரில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் எரிசனம்பட்டியில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News June 14, 2024

இன்ஸ்பெக்டர் கைது – நீதிபதி வேதனை

image

கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா , ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பின் நீதிபதி, ”மனுதாரர் மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மக்களை காக்க வேண்டிய போலீசை கைது செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது” எனக் கூறி, விசாரணையை ஜூன் 18க்கு தள்ளி வைத்தார்.

News June 14, 2024

திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் உதவி

image

சிறுபான்மையினருக்கு கடன் வழங்க டாம்கோ மூலம் நிகழாண்டு ரூ.2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிறுபான்மையினா் பயனடையும் வகையில் டாம்கோ திருச்சி மாவட்டத்துக்கு இந்தாண்டுக்கு ரூ. 2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டாம்கோ திட்டங்களுக்கு 18 வயது ஆனவராகவும் , 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

News June 14, 2024

சிவகங்கை:திணறும் அம்மா உணவாக ஊழியர்கள் 

image

காரைக்குடி:சுப்பிரமணியபுரத்தில் உள்ள அம்மா உணவகம் கடந்த 2015ம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது.முக்கிய இடங்களுக்கு மத்தியில் அம்மா உணவகம் அமைந்துள்ளதுஉணவகத்தில் உரிய நேரத்திற்கு உணவு கிடைக்காததால் பணியாளர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.உணவகத்தை பராமரிக்க முடியாமல் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன

error: Content is protected !!