Tamilnadu

News May 7, 2024

நெல்லையில் இன்று ஆஜராகும் தங்கபாலு

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைக்காக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் நேற்று சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் இன்று (மே 7) மதியம் 2.30 மணிக்கு மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராவதற்காக நெல்லைக்கு தங்கபாலு வருகை தர உள்ளார்.

News May 7, 2024

திருப்பூரின் இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம்!

image

மேற்குத்தொடா்ச்சி மலைத்தொடாில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் 1400 மீட்டா் உயரத்தில் உள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். இதில் 387 சகிமீ திருப்பூா் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே புலி, சிறுத்தை, கரடி, நாி, எறும்புத்தின்னி, புனுகுப்பூனை போன்றவையும் ராக்கெட் வால் ட்ராங்கோ, மீசை உள்ள புல்புல் பறவை, மரப்பறவை, புள்ளிப்புறா போன்றவையும், அமராவதி நீா்த் தேக்கத்தில் முதலைகளும் உள்ளன.

News May 7, 2024

2 கடிதங்களுமே ஜெயக்குமார் எழுதியது: உறுதி

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான உயிரிழந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரது எழுதிய இரண்டு கடிதங்கள் வைரலாகும் நிலையில் அந்த இரண்டு கடிதங்களும் அவரே எழுதியது என தடயவியல் துறை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

News May 7, 2024

வடலூர்: தொல்லியல் துறையினர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் தொல்லியல் துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.தொல்லியல்துறை இணை இயக்குநர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News May 7, 2024

மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

image

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு இன்று முதல் வருகின்ற 11 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். எனவே அரியலூர் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அரசு தேர்வு துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

திருச்சியின் அழகிய செயிண்ட் மேரீஸ் கேத்ரல்

image

திருச்சியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயமான செயிண்ட் மேரீஸ் கேத்ரல் புனித மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் ஜேசுட் மிஷனரியான Fr.Louis Carnier என்பவரால் 1839இல் கட்டத் தொடங்கப்பட்டு 1841இல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த தேவாலயம் கேத்திக் மற்றும் ரோமானஸ் பாணிகளில் கட்டப்பட்டுள்ளது. திருச்சியின் மையத்தில் அமைந்து நகருக்கு அழகு சேர்க்கிறது இத்தேவாலயம்.

News May 7, 2024

மறு கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொது தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 9ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது

News May 7, 2024

தஞ்சாவூர் ஸ்வார்ட்ஸ் சர்ச் சிறப்புகள்!

image

தென்னிந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக உள்ளது தஞ்சாவூர் ஸ்வார்ட்ஸ் சர்ச் ஆகும். 1779 இல் டேனிஷ் மிஷனரியான கிறிஸ்டியன் ஃபிரெட்ரிக் ஸ்வார்ஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1780 முதல் வழக்கமான வெகுஜனங்களை நடத்தினார். இதிலுள்ள சிலையை, லண்டனில் வாழ்ந்த இத்தாலிய சிற்பி ஜான் ஃபிளாக்ஸ்மேன் 1807இல் சரபோஜி மன்னரின் வேண்டுகோளிற்காக சிலையை செதுக்கியுள்ளார். இச்சிலை 1811 இல் தேவாலயத்தில் நிறுவப்பட்டது.

News May 7, 2024

பெரம்பலூர்: 10 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி!

image

பெரம்பலூர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 6வது இடம் பிடித்தது. இதில் பூலாம்பாடி, அனுக்கூர், நெற்குணம், ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், பேரளி, கவுல் பாளையம், எளம்பலூர், கீழமாத்தூர் மற்றும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News May 7, 2024

ஜெயக்குமார் கொலை? தனித்தனியே விசாரிக்க முடிவு

image

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கடந்த மே.2ஆம் தேதி இறந்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் வழக்கு தொடர்பாக சிலரை தனித்தனியே விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஜெயக்குமாரின் மரண வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களை 15 தினங்களுக்குள் ஆஜராக போலீஸ் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் அதில் தொடர்புடைய 40 பேரை தனித்தனியே விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!