Tamilnadu

News June 14, 2024

சிவகங்கை: ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் 

image

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு நேற்று (ஜூன் 13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News June 14, 2024

அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற குமரி எம் பி

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட விஜய் வசந்த் அமோக வெற்றி பெற்றார். இத்தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற விஜய் வசந்த் எம் பி நேற்று (ஜூன்-13) சென்னையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News June 14, 2024

மகளிருக்கான முக்கிய செய்தி

image

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மகளிருக்கான சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் நாளை(ஜூன் 13) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஜிதா சைபர் குற்றம் தவிர்ப்பு குறித்து எடுத்துரைக்க உள்ளார். இந்த முகாமில் பங்கேற்ற அனுமதி இலவசம் என்பதால் பெண்கள் பங்கேற்று பயனடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 14, 2024

தேனி: 15 ஆட்டோக்கள் பறிமுதல்

image

தேனி, பழனிசெட்டிபட்டி போலீசார் கடந்த 2 நாட்களாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாத 15 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த 15 ஆட்டோக்களையும் நேற்று (ஜூன்.13) போலீசார் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தேனி வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பறிமுதல் ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்து, ஆன்லைன் அபராதம் விதிக்கும் நடைமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தார்.

News June 14, 2024

ஒரு தொகுதில் கூட வெற்றி பெறாதது ஏன்? எம் எல் ஏ கேள்வி

image

கிள்ளியூர் MLA ராஜேஷ் குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, ” அண்ணாமலை கூறுவது போல  தமிழகத்தில் பாஜக வளர்ந்து இருந்தால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது ஏன்? மக்கள் மன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே ஒரு கட்சி பலமானதா, பலவீனமானது என்பது தெரியும். பிரதமர் அனைவருக்குமானவர். ஆனால் அவர் குறிப்பிட்ட மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்” என்றார்.

News June 14, 2024

உதவித்தொகை வழங்க வேண்டி எம்எல்ஏ அறிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு வழங்கும் மாத உதவித் தொகை வேண்டி விண்ணப்பம் செய்தவர்களில் 5000 பேர் தகுதியுள்ள பயனாளிகள் என அவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது .ஆனாலும் ஒராண்டிற்கு மேலாகியும் விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் ,முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கவில்லை. எனவே விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ ரவி அறிக்கை விடுத்துள்ளார்.

News June 14, 2024

திருப்பத்தூரில் ஆய்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் போதை பொருட்களான குட்கா பான் மசாலா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைபொருட்கள் விற்பனை தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

News June 14, 2024

வாகன பேரணி – ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து

image

கார்கில் வெற்றியின் ரஜத் ஜெயந்தி வெள்ளி விழா நினைவாகவும், வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும் தனுஷ்கோடி முதல் கார்கில் வரை இந்திய ராணுவ வீரர்கள் வாகன பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று கோவை வந்த அவர்களை சிட்டி கமிஷனர் பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்தி பேசினார். அப்போது, ராணுவ பீரங்கி படை பிரிவின் கமாண்டிங் அதிகாரி கா்னல் ஸ்ரீதா் ராஜன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் இருந்தனர்.

News June 14, 2024

முப்பெரும் விழா – முதல்வர் நாளை கோவை வருகை

image

மறைந்த முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களவை தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தோ்தல் வெற்றிக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியாவில் நாளை (ஜூன் 15) நடைபெறுகிறது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள், 40 தொகுதிகளிலும் வென்ற எம்பிக்கள், கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

News June 14, 2024

விராலிமலை அருகே தொழிற்சாலை தொழிலாளி உயிரிழப்பு

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை
கே. உடையார்பட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் விராலிமலை- மதுரை சாலை காணியாளம்பட்டி பிரிவு அருகே இரும்பு கட்டில், பீரோ தயாரிக்கும் தனியா தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி பணியின் போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சகத்தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த நிலையில் 12-ந்தேதி உயிரிழந்தார்

error: Content is protected !!