India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹேராய்னின் மூலப் பொருளான ஹசிஸ் என்ற போதைப் பொருளை வைத்திருந்த் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த இருவரை க்யூ பிரிவு போலீசார் இன்று (ஜூன் 14) கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 75 கிலோ ஹசிஸ் போதை பொருளை கைப்பற்றினர். விசாரணையில் இது ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 180 கோடி இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கின்றனர்.
விருதுநகரைச் சேர்ந்த கோபால் (29) என்பவர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவரை கடந்த மாதம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றி உள்ளனர். இந்தநிலையில், சிறையில் இருந்த கோபால் நேற்று தப்பி ஓடியுள்ளார். தப்பியோடிய கோபாலை போலீசார் இன்று (ஜூன் 14) கண்டுபிடித்து கைது செய்தனர்.
புதுச்சேரி உள்ளாட்சி துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு தனியார் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளில் உருவாகும் கட்டிட கழிவுகள் ஒழுங்கற்ற முறையில் பொது சாலைகளில் தேக்கி வைத்து உள்ளனர் இதனை உரிமையாளர்கள் அகற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் நகராட்சியே அக்கழிவுகளை அகற்றி அபராதம் விதிக்கப்படும் என்றார்
ஆம்பூர் நகரம் வார்டு 10 இல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் திமுக நகர மன்ற உறுப்பினர் இம்தியாஸ் அஹமத் தலைமையில் ரிங் நோய் தடுப்பு சொட்டு மருந்து 50 குழந்தைகளுக்கு மேல் போடப்பட்டுள்ளது. மேலும் சொட்டு மருந்து தேவைப்படும் குழந்தைகளுக்கு வந்து போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 20ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, மாவட்ட தொழில்நெறி வழி காட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். காலை 10:30 மணிக்கு தனியார் துறையினர் பங்கேற்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில், விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி மற்றும் பிற சான்றுகளுடன் பங்கேற்று பயன்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சிறுபான்மையினர்கள் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கு ஏதுவாக, ஜூன் 26-ம் தேதி முதல் ஜூலை 11-ம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லோன் மேளாக்கள் நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுள்ள சிறுபான்மையினர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு ஒருநாளைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று பக்தர்களுக்கு ஏதுவாக சோர்வை போக்கும் விதமாக சுற்றி வரும் கிரி வீதியைச் சுற்றி 28 இடங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இந்த மாதம் 20ஆம் தேதிக்கு பின்னர், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என திருநெல்வேலி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வானிலை செய்தி அறிக்கையில், 89 அடியாக உள்ள பாபநாசம் அணையின் நீர் இருப்பு 110 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் நிரம்ப வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கு.ஜவகர் இ.கா.ப., கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஜூலை 5ம் தேதி துவங்குகின்றது. இதனை காண 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வரும் ஜூலை மாதம் 5ஆம் தேதி நடக்க உள்ளது.
Sorry, no posts matched your criteria.