Tamilnadu

News June 15, 2024

விருதுநகர் அருகே மூன்று பேர் கைது

image

விருதுநகர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பழனிச்சாமி புல்லலக்கோட்டை ரோடு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்குள்ள சுந்திரலிங்க நகரில் விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்த சிவ சபரி பாலன், யானை குழாய் தெருவை சேர்ந்த அழகர் உள்ளிட்ட 3 பேர் 30 கிராம் கஞ்சா, 2 அரிவாள் மற்றும் கத்தியுடன் நின்று கொண்டிருந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

News June 15, 2024

நெல்லை: கலப்பு திருமணங்களுக்கு அணுகவும்

image

சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணங்களுக்கு, காதலர்களுக்கு சாட்சி கையெழுத்திட திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை எப்பொழுதும் அணுகலாம் என
நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஸ்ரீராம் இன்று (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்திலும் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

News June 15, 2024

கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 39 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

News June 15, 2024

கொல்லிமலை: 35 போலீசார் சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வு

image

கொல்லிமலையில் பணியாற்றி வந்த 4 போலீசாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் உள்ள செம்மேடு செங்கரை ஆகிய போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலர்களாக பணியாற்றி வந்த அண்ணா, ஜெகதீசன்,சரவணன்,ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளனர் இவர்கள் நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 35 பேர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

News June 15, 2024

மதுரை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் முலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே மதுரை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News June 15, 2024

நாளை மாரத்தான் போட்டி

image

கன்னியாகுமரி மாவட்ட தடகள அசோசியேஷன் மற்றும் மார்த்தாண்டம் கேப் வாரியர்ஸ் ஸ்போர்ட்ஸ் அன்ட் சேரிட்டி ஆர்கனைசேஷன் இணைந்து நடத்தும் 21 கி.மீ மாரத்தான் போட்டி நாளை (16.6.24) மார்த்தாண்டத்தில் தொடங்குகிறது. இந்த மாரத்தான் போட்டி நாளை காலை 5.30 மணிக்கு நடைபெறும். இந்த மாரத்தான் போட்டியை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைக்கிறார்.

News June 15, 2024

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு 

image

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூன் 15) காலை 43.10 அடியிலிருந்து 42.87 அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 149 கன அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 13.61 டிஎம்சியாக உள்ளது. 

News June 15, 2024

பிராணிகள் வதை தடுப்பு சங்கம் – ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் அமைப்பது குறித்த ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 14) நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். கால்நடை இணை இயக்குனர் கோபி கிருஷ்ணன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கால்நடைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்க பிராணிகள் வதை தடுப்பு சங்கம் அமைக்கப்பட உள்ளது.

News June 15, 2024

மாவட்ட திறன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திறன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (ஜூன் 14) நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். திறன் பயிற்சி உதவி இயக்குனர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன் மற்றும் சிறு குறு தொழில் நிர்வாகத்தை சேர்ந்த சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News June 15, 2024

விழுப்புரம் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று (ஜூன் 14) தமிழக முதல்வர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் 100% வெற்றி பெற்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. விழாவில் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

error: Content is protected !!