India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு ,காந்தளூர், தூவானம் போன்ற பகுதிகளில் தற்சமயம் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது .தற்போது வினாடிக்கு 87 கன அடியாக உள்ள நிலையில் மொத்த 90அடியில் 50.82 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது
நீலகிரி மாவட்டம் கூடலூர் வன சரகத்திற்கு உட்பட்ட புளிம்பாறை கிராமத்தில் உள்ள தனியார் பாக்கு தோப்பில் சிறுத்தை இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு நேற்று தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையில் விரைந்தனர். இதையடுத்து முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உடற்கூறாய்வு செய்தார். இது 5 வயது பெண் சிறுத்தை என்பது தெரிய வந்தது.
மேல்புறம் வட்டத்தில் 1170 ஹெக்டரில் சாகுபடி செத்துள்ள தென்னைகளுக்கு பல்வேறு நோய்கள் வருவது குறித்து ஆய்வு செய்ய முனைவர் கோவிந்தராஜன் தலைமையில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையத்தை சார்ந்த மூன்று விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர். இதில், தென்னை வேர் வாடல் நோயின் அறிகுறிகள் மற்றும் தீவிரம் குறித்து ஆய்வு செய்தல் அவர்களுடன் தோட்டக்கலை துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சேலம் தருமபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து 33 கைதிகள் நேற்று (ஜூன் 15) சேலம் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடித்து செல்லப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாளை பகுதியைச் சேர்ந்த வள்ளிநாயகம் கடந்த 6ம் தேதி தச்சநல்லூர் சிவன் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் நின்ற போது அங்கு வந்த ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த சிவபெருமாள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இது குறித்து வள்ளிநாயகம் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவபெருமாளை நேற்று கைது செய்தனர். இவர் பாஜக நிர்வாகி ஆவார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று உலக கொடையாளர் குருதி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் தலைமையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரத்த தான தின உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டார்கள் மற்றும் இரத்த தானம் கொடையாளர்களை கௌரவிக்கும் வகையில் கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையினை வழங்கினார்.
திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று வந்து நின்றது. அப்போது அந்த பேருந்தில் மர்ம பை ஒன்று இருந்ததை கண்டு அதன் ஓட்டுனர் உடையதுல்லா (37) என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தப் பையில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேலூர் மாவட்டம் நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் அமைப்பை சார்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 6 சுயேட்சைகள் மனு செய்துள்ளனர்.
இராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வணிகர்கள் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. மதுரை மண்டல இணை ஆணையர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார். இராமநாதபுரம் வருமான அதிகாரி சந்திரசேகர், ஆலோசகர் ஆடிட்டர் திருப்பதி, இராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தனர். நாட்டின் பொருளதார வளர்ச்சிக்கு அனைவரும் வருமானவரி செலுத்த வேண்டும் என்று மண்டல இணை ஆணையர் தெரிவித்தார்.
இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25ம் தேதி மதியம் 3:30 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் தமது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.