India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று இளங்கலை (பி.ஏ. தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம் ) மற்றும் நான்கு இளம் அறிவியல் (பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல் , வேதியியல் மற்றும் இயற்பியல்)பாட பிரிவுகள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 6-ம் தேதி முதல் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணபிக்க கடைசி நாள் மே 20-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், ஜாவா, 3 டி ‘அனிமேஷன் அண்ட் ஸ்பெஷல் எபக்ட்ஸ் ‘ குறித்த பயிற்சி ஜூனில் நடக்கிறது.
பத்தாம் வகுப்பு மேல் படித்த 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இலவசம். இதர பிரிவினருக்கு குறைந்த கட்டணம். முன்பதிவுக்கு: 86956 46417 அழைக்கவும்
பெரம்பலூர் சீனிவாசா செவிலியர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் திருச்சி SRM பல்கலைக்கழகத்தில் மே 7 அன்று நடைபெற்ற உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளான கேரம் போர்டு, கால் பந்து ஆகிய போட்டிகளில் முதல் மற்றும் 2ம் பரிசு வென்றனர். அந்த மாணவர்களை நேற்று(மே 9) தனலட்சுமி சீனிவாச பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பாராட்டி பரிசு வழங்கினார்.
சேலம் மாவட்டம் மணி விழுந்தான் காலனி பகுதியை சேர்ந்த அழகுத்துரை என்பவர், நேற்று(மே 9) அதிகாலை 3 மணியளவில் ஆத்தூர் நோக்கி டேங்கர் லாரி ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் ஆட் கொல்லி பாலம் அருகே வரும்போது செந்தில்குமார் என்பவர் வீட்டின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது இதில் வீட்டில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி அருகே கீழதிருத்தங்களில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து தொடர்பாக சிவகாசி போலீசார் போர்மென் சுரேஷ் பாண்டியன், குத்தகைதாரர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து இன்று(மே 10) அதிகாலை அரூர் நோக்கி வைக்கோல் கட்டுகளை ஏற்றி வந்து சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் ஓட்டுநர் உயர் தப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்களை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கா் கோவை சிறையில் தாக்கப்பட்டதாகவும் , அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அதனால் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது தாய் கோவை கோர்ட்டில் விண்ணப்பம் அளித்தார். இதனை பரிசீலித்த நீதிபதி சவுக்கு சங்கரை வேறு சிலைக்கு மாற்ற பரிசீலிக்க சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
புதுவையில் நீட் அல்லாத பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கடந்த 8-ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளம் மூலம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனா். அதனடிப்படையில், 9, 993 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வருகிற 22-ஆம் தேதி வரையில் பெறப்படவுள்ளன . வருகிற ஜூன் 5-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் பத்தாம் பொதுத்தேர்வு (மார்ச் 26) தொடங்கி நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 103 தேர்வு மையங்களில் 9320 மாணவர்கள், 9350 மாணவிகள் என மொத்தம் 18670 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று மே (10) காலை 9: 30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in 2024 என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டய படிப்பில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டு பட்டய படிப்பிலும் ,பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக 2 ஆம் ஆண்டு சேர்க்கையிலும் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.