Tamilnadu

News June 16, 2024

திருச்சி: 5 பேரிடம் பணத்தை ஏமாற்றிய ஜோதிடர் கைது

image

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஜீவானந்தம்.இவர் சில நாட்களுக்கு முன் மணிகண்டன் என்பவரிடம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்து ஏமந்தார். இது குறித்து, ஸ்ரீரங்கம் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் ஜோதிடர் என்பதும்,இவர் 5 பேரிடம் ரூ.13 லட்சம் வரை பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இன்று மணிகண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

News June 16, 2024

கடலூர் மாவட்ட வெப்பநிலை முழு நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 39 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 39 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News June 16, 2024

திண்டுக்கல்: நில அளவைக்கு இணையதளம்

image

தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை https://tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. இதில், பட்டா மாறுதல் “தமிழ் நிலம்” கைப்பேசி செயலி இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மூலம் விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News June 16, 2024

விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

image

வழக்கறிஞர் கௌதமன் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், படுகொலை சம்பவத்திற்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் விருத்தாசலத்தில் நேற்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், அருள் குமார், பார் அசோசியேஷன் செயலாளர் மாய.மணிகண்டன், மணிகண்ட ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 16, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேமுதிக புறக்கணிப்பு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “இன்றைய ஆட்சியாளர்களின் கரங்களில் தேர்தல் என்கிற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. இடைத்தேர்தல் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

News June 16, 2024

சிதம்பரம் ஈகை திருநாளுக்கு தொழுகைக்கு இடம் தயார்

image

சிதம்பரத்தில் நாளை(ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பெருநாள் தொழுகை
ஈத்கா மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக சிதம்பரம் நகராட்சி சார்பாக இயந்திரங்கள் மூலம் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கு தொழுகைக்கு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6.15 மணிக்கு தக்பீர்
காலை 6.30 மணிக்கு பயான்
காலை 7.00 மணிக்கு தொழுகை நடைபெறும்.

News June 16, 2024

பழமை வாய்ந்த கல் மண்டபம் சீரமைக்கப்படுமா?

image

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தெப்பக்குளத்திற்கு வட திசையில் தாமிரபரணி ஆற்றுக்குள் உள்ள பழமை வாய்ந்த கல் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மண்டபமானது அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த மண்டபத்தை புதுப்பிக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.

News June 16, 2024

குமரி மாவட்ட அணை நீர் இருப்பு நிலவரம்

image

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு; 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2  அணைகளில் முறையே 16.43, 16. 53, அடி  நீரும், 48 அடி கொள்ளளவு  கொண்ட பேச்சிப்பாறையில்  44. 82 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட  பெருஞ்சாணி அணையில்  68.96 அடி நீரும்,  25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 16.8 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.9 அடி நீரும் இருப்பு உள்ளது.  

News June 16, 2024

விருதுநகரில் உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக நேற்று உயர்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

News June 16, 2024

குமரி: ரூ. 6 கோடிக்கு மீன்கள் விற்பனை

image

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 61 நாள்கள் தடைகாலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்களுக்கு கேரை , விளைமீன் , பாரைமீன் , நவரை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தது. நேற்று ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மீன் விற்பனை நடந்துள்ளது. கேரளா வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மீன்களை வாங்க குவிந்தனர். மீன்களின் வரத்து குறைவால் விலையும் கிடு கிடுகிடுவென உயர்வு.

error: Content is protected !!